மன்மத லீலையை வென்றார் உண்டோ?
[திரை]
மன்மத லீலையை வென்றார் உண்டோ?
தமிழ் சினிமாவும் பெண்ணுடல் நோக்கலும்
தியடோர் பாஸ்கரன்
‘பாண்டுரங்க விட்டல்’ படத்தில் நடிகை காந்தாமணி
ஒரு பையனும் பெண்ணும் பழக அனுமதியும் வெளிகளுமில்லாத ஒரு சமூகத்தில், இருட்டறையில் அமர்ந்து, மற்றவர்கள் தங்களைக் கவனிக்காமல், பெண் பிம்பங்களைத் திரையில் இடையூறின்றிப் பார்க்கும் வசதி 1930களில் கிடைத்தது. பெண்கள் திரையில் தோன்றி ஆடினார்கள், பாடினார்கள். அவர்களை அண்மைக்காட்சியிலும் பார்க்க முடிந்தது. அந்த காலகட்டத்தில் வ