தலையங்கம்

கல்வித்துறையில் மாற்றங்கள் உருவாகுமா? கொடுந்தொற்றுக் காலத்தில் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பள்ளிக் கல்வி முதல் உயர்கல்வி, ஆராய்ச்சிப் படிப்பு வரை ஒவ்வொரு பிரிவு மாணவர்க்கும் ஒவ்வொருவிதமான பாதிப்பு. கல்விக்கூடங்களுக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருத்தல், வலைவகுப்பு தொடர்பானவை, தேர்வு

கடிதங்கள்

கடிதங்கள் தமிழக, கேரளத் தேர்தல்கள் பற்றிய கட்டுரைகள் சிறப்பாக வந்திருக்கின்றன. தமிழகம், திராவிட மண். நீதிக் கட்சிக்குப் பிறகு திராவிடர் கழகம், அதிலிருந்தும் திமுக தொடங்கப்பட்ட நாளிலிருந்தே மக்களால் இது உணரப்பட்டது. திமுகவுக்கும்முன் ஆரியத்துக்கு எதிரான சூத்திர எழுச்சியாகவே திராவிடம் கண

கட்டுரை

மத்திய மாநில அரசுகள்: போட்டி அல்ல, ஒருங்கிணைப்பு தேவை   அதிகாரக் குவிப்பிலிருந்து அதிகாரப் பரவலுக்கு கோவிட் பெருந்தொற்றுக்கான எதிர்வினையில் இந்திய அனுபவம். – லூயிஸ் டில்லின் பல்வேறு அடுக்குகளாலான நிர்வாகத்தையும் சிக்கலான அதிகாரப் பரவலையும் கொண்ட கூட்டாட்சி அமைப்பு, நெரு

கட்டுரை
தி. பரமேசுவரி

இனியாவது விதி செய்வோம் தி. பரமேசுவரி வாழ்க்கையை முன்கூட்டி மதிப்பிட உதவும் கலை என்று கல்வியைச் சொல்லலாம். மதிப்பிடல் மூலம் வாழ்க்கையை எதிர்கொள்வதும் மாறிவரும் வாழ்க்கையைப் புரிந்துகொண்டு நம் சமன்நிலையைக் காப்பாற்றிக்கொள்வதும் சாத்தியமாகிறது. ஆனால் இன்றைய கல்வி மூலம் நம் வாழ்க்கையைப் புரிந்

ஆலோசனை
மா

அனுபவங்களும் பொறுப்புகளும் மா (வளர் இளம்பருவ கல்வி ஆலோசகர்)   பாலியல் சவால்களைப் பாலியல் இச்சை, பாலியல் அத்துமீறல் என இரண்டாகப் பிரித்துப் பார்க்கிறேன். ஏனெனில் வளர்இளம் பருவத்தில் பாலியல் உணர்வுகளைக் கையாள்வதற்கும் வயதுவந்தோரின் பாலியல் உணர்வுகளைக் கையாள்வதற்கும் வேறுபாடு உள்ளது.

ஆலோசனை
கீதா நாராயணன்

சீர்திருத்தங்கள் தேவை கீதா நாராயணன் (வளர்ச்சி, ஆலோசகர், ஆய்வாளர், செயற்பாட்டாளர்) பாலியல் வன்முறைகள், அத்துமீறல்கள் குடும்பம், கல்வி நிறுவனங்கள், பணித்தளங்கள் என அனைத்து நிறுவனங்களிலும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன. இப்போது வெளிவந்திருக்கும் பள்ளிகளில் நடந்த குற்றங்கள்பற்றிக

கலந்துரையாடல்
கா. கிருஷ்ணவேணி

  போராடாமல் நீதி கிடைக்காது மொழிபெயர்ப்பும் தொகுப்பும் கா. கிருஷ்ணவேணி பாதிக்கப்பட்ட பெண்களையும் உள்ளடக்கிய இந்தக் கலந்துரையாடல் வைரமுத்துமீதான ‘மீடூ’ குற்றச்சாட்டுக்களின் விளைவுகளை விரிவாக அலசுகிறது. தெஹல்கா பத்திரிகை ஆசிரியர் தருண் தேஜ்பால் மீதான பாலியல் குற்றச்சா

கட்டுரை
ஜே.ஆர்.வி. எட்வர்ட்

தேர்வுகள் சோதனைகள் ஜே.ஆர்.வி. எட்வர்ட் சென்ற ஆண்டு (2020) மார்ச் இறுதியில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது, தமிழ்நாட்டில் மேல்நிலை இரண்டாமாண்டு மாணவர்களின் தேர்வுகள் முடிந்திருந்தன, ஒருநாள் தேர்வைத் தவிர. அது பிற்பாடு சில குழப்பங்களுக்கிடையில், ஓரிரு ஒத்திவைப்புகளுக்குப் ப

கட்டுரை
இசை

காலச்சுவடும் நானும் இசை ‘காற்று கோதும் வண்ணத்துப் பூச்சி’ இது என் முதல் கவிதைத் தொகுப்பு. பட்டியலில் ஊழல் கூடாது என்பதற்காக இதை ஒளிப்பதில்லை. ஆனால் என்னளவிலும் வாசகர் அளவிலும் ‘உறுமீன்களற்ற நதி’தான் என் முதல் கவிதைத் தொகுப்பு. இதை 2008இல் காலச்சுவடு வெளியிட்டது. இப்

அஞ்சலி: க.மு. நடராஜன் (1932 - 2021)
த. கண்ணன்

வரலாற்றுடன் ஒரு பயணம் த. கண்ணன் க.மு. நடராஜன் (1932 - 2021) உலக அளவில் க.மு. நடராஜன் என்ற பெயரை அறியாத காந்தியர்களைக் காண்பது அரிது. ஆனால் சர்வோதய இயக்கத்துக்கு வெளியில் அதிகம் அறியப்படாமலே மறைந்த பெரும் ஆளுமை அவர். தமிழ்நாட்டில் கொரோனா காலத்தில் ஏற்பட்ட பேரிழப்புகளில் ஒன்று அண்மையில் ந

அஞ்சலி: சுந்தர்லால் பகுகுணா (1927 – 2021)
சுகுமாரன்

வாழ்தல் இனிது சுகுமாரன் சுந்தர்லால் பகுகுணா (1927 – 2021) “நமது மலைகளையும் வனங்களையும் நதிகளையும் பாதுகாப்பதில் எனக்கு முதன்மையான அக்கறை இருக்கிறது. ஏனெனில் நான் இமயத்தின் மடியில் பிறந்தவன்’’ இந்த வாசகங்கள் நான் பணியாற்றிய தொலைக்காட்சி நேர்காணலில் சுந்தர்லால் பகு

அஞ்சலி: தீப. நடராஜன் (1933 – 2021)
வேலாயுத முத்துக்குமார்

கி.ரா.வின் ஆப்த நண்பர் வேலாயுத முத்துக்குமார் தீப. நடராஜன் (1933 – 2021) தமிழருக்குத் தமிழே துணை’ என்னும் மந்திரத்தைத் தமிழர்களுக்குச் சொன்ன ரசிகமணியின் பேரனும் கி.ரா.வின் ஆப்த நண்பருமான தீப. நடராஜன் கடந்த 22.05.2021 அன்று காலமானார். ரசிகமணி டி.கே.சி.யின் புதல்வர் தெ.சி. தீத

அஞ்சலி: மைதிலி சிவராமன் (1939 – 2021)
வே. வசந்திதேவி

தேடலில் பிறந்த அர்ப்பணம் வே. வசந்திதேவி மைதிலி சிவராமன் (1939 – 2021) சென்னை மாநிலக் கல்லூரி; 1956ஆம் ஆண்டு; மேல் தளத்தில் இருக்கும் மாணவியரின் அறை; உள்ளிருக்கும் தேவிகளின் தரிசனத்திற்காக எந்நேரமும் வராந்தாவில் அலைந்துகொண்டிருக்கும் மாணவரின் கண்களில் படாமல் இருப்பதற்காக எப்பொழுதும

அஞ்சலி: சித்தலிங்கையா (1954 – 2021)
பாவண்ணன்

நட்பார்ந்த கைகளும் புன்னகையும் பாவண்ணன் சித்தலிங்கையா (1954 – 2021) 1982இல் கர்நாடகத்தில் ஹொஸபேட்டெயில் தங்கியிருந்தபோது, எங்கள் முகாமுக்கு அருகில் பெயர்ப்பலகை இல்லாத ஓர் எளிய ஓட்டலுக்குக் காலைச்சிற்றுண்டி சாப்பிடச் செல்வது வழக்கம். அந்த ஓட்டலை நடத்திவந்த குருஷாந்தப்பா பழகத் தொடங்

மீள்பதிவு

  எஸ்.என். நாகராஜன் (1927 - 2021) காலச்சுவடு இதழ் 10இல் (ஜனவரி - மார்ச் 1995) வெளிவந்த எஸ்.என். நாகராஜனின் நேர்காணலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில கேள்வி - பதில்கள் அவர் நினைவாக மீள்பிரசுரம் செய்யப்படுகின்றன. தகுதியிருந்தா யார வேணா ஆச்சாரியனா வச்சுக்கறதுக்கு ஒரு மரபு இருந்ததுங்கி

கதை
நொயல் நடேசன்

  வவ்வால்கள் நொயல் நடேசன் ஓவியம்: றஷ்மி நம் மனம் புனிதமற்றது என்பது மட்டும் உண்மை; குழந்தைகளுக்கு விலக்கு அளிக்கலாம். கொலை, பாலியல் வன்முறைகள், வஞ்சனைகள், திருட்டுகள் எனப் பல குற்றச்செயல்கள் கணத்துக்குக் கணம் முளைவிடும் அநியாய பூமி எமது மனவெளியே. அங்குதான் புவியில் நடக்க

கட்டுரை
எஸ்.ஆர். கிருஷ்ணமூர்த்தி

இரவில் எல்லாருடைய இரத்தமும் கறுப்புத்தான் எஸ்.ஆர். கிருஷ்ணமூர்த்தி 2021ஆம் ஆண்டு சர்வதேச புக்கர் பரிசு Frère d’âme (ஆத்ம சகோதரன்) என்னும் பிரெஞ்சு நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கு வழங்கப்படுகிறது. தாவித் தியோப் (David Diop) எழுதிய இந்த நாவல் 2018ஆம் ஆண்டு வெளிவந்தது. இதன

கட்டுரை
 சச்சிதானந்தன் சுகிர்தராஜா

ஆசியாவை அசத்த முயன்ற பொதுவுடைமைவாதிகள் சச்சிதானந்தன் சுகிர்தராஜா இந்தப் படத்தைச் சற்று உற்றுக் கவனியுங்கள். முன் வரிசையின் நடுவில் இருப்பவர் Grigory Zinoviev. இவர்தான் பிரபல ரஷிய பொதுவுடைமைக்கொள்கையர். அனைத்து நாட்டுப் பொதுவுடைமை அமைப்பின் தலைவர். போல்ஷிவிக் புரட்சியை உலகுக்குப் பரப்ப நியம

பாரதியியல்
ய. மணிகண்டன்

    பாரதியியலும் பாரதியார்களும் எந்தப் பாரதி இந்தப் பாரதி? ய. மணிகண்டன்                                    அ. சுப்பிரமணிய பாரதி               

சிறப்புப் பகுதி: பொருநை பக்கங்கள்
எம்.ஏ. நுஃமான்

கவிதையிலோர் பெருவாழ்வு எம்.ஏ. நுஃமான் பொருநை பக்கங்கள் மஹாகவி இலக்கிய ஆர்வலர்களான நண்பர்கள் சிலரின் கூட்டு முயற்சி ‘பொருநை.’ அதன் ஒரு பகுதியே காலாண்டுக்கு ஒருமுறை வெளியாகும் ‘பொருநை பக்கங்கள்.’ தமிழின் மகத்தான படைப்பாளிகளைப் புதிய தலைமுறை வாசகர்களுக்கு எளிமையா

சிறப்புப் பகுதி: பொருநை பக்கங்கள்

இதய கீதம் நாடிக்குழாய் வைத்து நன்றாகக் கேட்டு விட்டும், ‘ரீரிக்...ரிரிக்....ரிக்’ என அங்கோர் மின் கருவி பாடிக்குறிக்கும் குறிப்பு ஒன்றைப் பார்த்து விட்டும், மூடிக் கிடக்கும் அறையுள் முடுக்கிய ஓர் காணாஒளியின் கதிர் நிழலைக் கண்டு விட்டும், வாழ் நாளைப் ப

சிறப்புப் பகுதி: பொருநை பக்கங்கள்

பாரதிக்குப் பின்தோன்றிய பெருங்கவி                                     சண்முகம் சிவலிங்கம் “மஹாகவி ஒரு புதிய சந்ததியை விருத்தியாக்கும் ஓர் கால கட்டம் ஆகிறார். நாம் இன்னமும் பாரதி யுகத

சிறப்புப் பகுதி: பொருநை பக்கங்கள்

பொருள் நூறு (1966) அஞ்சல் அஞ்சலிலே என் ஆசையை எழுதினேன். பஞ்சி இன்றிப் பதில் ஒன்றனுப்பினாள். ஆயினும், படித்திடல் இயலா நெடுத்த பதில் அது. ஆதலால் நேரிலே அவள் பாற் பேர்தல் புரிந்ததன் பொருள் அறிந்தேனே.   ஆணி அடிப்பதைப் பொறுக்கவே அமைந்ததுன் தலையே ஆள்பவர்க் குத

சிறப்புப் பகுதி: பொருநை பக்கங்கள்

குறும்பா (1966) காதலரின் ஓவியம் வரைந்தான் கண்ணியம் உள்ளார் என நினைந்தான்.        மாதம் உருண் டோட, மறு        கண்காட்சி வந்தது. ஃஆ, தீது புரிந் தார் என உணர்ந்தான்.     “நன்றி சொல்வேன் என எ

சிறப்புப் பகுதி: பொருநை பக்கங்கள்

வடலிக்கூடல் எனும் அந்த ஊரிலே வந்து வாழ்ந்த ஒருவன் எழுந்து, தன் படலைக் கிட்ட படலைக் கடக்கிறான். படுக்கை மீதிரு கைகளும் சோர்ந்துபோய் உடலி னோடுயிர் அற்றுக் கிடந்தன. உற்ற நோயை உணர்ந்து துடிக்கவும் இடமிலாமல் உடம்பு களைத்ததால், இட்ட பாட்டில் இசைந்து கிடந்தது.   தெய்

கதை
வண்ணநிலவன்

  வாணவேடிக்கை வண்ணநிலவன் வாயிலிருந்து, வாணி (எச்சில்) வடிய வடிய சங்கர கணபதி தூங்கிகொண்டிருப்பதைப் பார்த்து செல்லம்மாளுக்கு எரிச்சலாக இருந்தது. ஏழுமணி வெயில் அவன்மீது சுள்ளென்றுதான் அடித்துக் கொண்டிருந்தது. அதுபோதாதென்று, காளைக் கன்று கட்டிலருகே நின்று அவன் முகத்தை நக்கிக்கொண்டிருந்

மதிப்புரை
களந்தை பீர்முகம்மது

  ‘ரோஜா’ மனம் களந்தை பீர்முகம்மது இந்திய சினிமாவில் முஸ்லீம்கள் அப்சல் வெளியீடு இருவாட்சி (இலக்கியத் துறைமுகம்) 41, கல்யாண சுந்தரம் தெரு, பெரம்பூர், சென்னை - 11 பக். 232 ரூ. 250 இந்திய அரசியல், பண்பாட்டுக் களங்களைத் தொட்டவுடன் மின்சாரத்தைத் தொட்டத

விளம்பரம்
உள்ளடக்கம்