ஆசியாவை அசத்த முயன்ற பொதுவுடைமைவாதிகள்
ஆசியாவை அசத்த முயன்ற பொதுவுடைமைவாதிகள்
சச்சிதானந்தன் சுகிர்தராஜா
இந்தப் படத்தைச் சற்று உற்றுக் கவனியுங்கள். முன் வரிசையின் நடுவில் இருப்பவர் Grigory Zinoviev. இவர்தான் பிரபல ரஷிய பொதுவுடைமைக்கொள்கையர். அனைத்து நாட்டுப் பொதுவுடைமை அமைப்பின் தலைவர். போல்ஷிவிக் புரட்சியை உலகுக்குப் பரப்ப நியமிக்கப்பட்டவர். அவருக்கு இடதுபக்கத்தில் இருப்பவர் ஜப்பானியப் பொதுவுடைமைவாதியும் அரசழிப்பாளருமான Sen Katayama. அவருக்கு அருகில் Nguyen Ai Quoc. இவர்தான் பின்னாளில் மிகப் பிரபலமடைந்த வியட்நாமின் Ho Chi Minh. பின் வரிசையில் இடதுபக்கத்தில் மூன்றாவதாக நிற்பது இந்தோனேசியா புரட்சியாளர் Tan Malaka. ஒல்லியராக அவருக்குப் பக்கத்தில் காணப்படும் நீண்ட மனிதர்தான் இந்தியாவின் M.N.