தீயணைப்பு
தீயணைப்பு
ஓவியம்: கார்த்திகேயன்
நேற்று மாலை எங்கள் வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் தீப்பிடித்துக் கொண்டது. திரண்டு நிற்கும் மார்பை முன்னால் நிமிர்த்தியபடிக் காற்றில் நீண்ட கூந்தல் மயிர்கள் சடசடக்க இடை குறுக்கி ஜொலிக்கும் பாதங்களை முன்னும் பின்னும் லாவகமாக எடுத்துவைக்கும் தேர்ந்த நடனக் கலைஞனைப்போல தீ அந்த வீட்டின் சுவர்கள், சன்னல் சட்டங்கள், தூண்கள், வாசல்படி என்று எங்கும் முன்னேறியது. அத்தனை பெரிய வீட்டைத் தனது சின்ன வாய்களால் தின்று முடிக்கும் முயற்சியில் அதன் உடல் முழுவதும் சிவந்திருந்தது.
பல்லாண்டுகளாய் சிமெண்ட் பூச்சுக்கள், ஆணிகள், சட்டங்கள், இணைப்புக்கள் என்று பலமான கட்டுகளால் அடக்கிவைக்கப்பட்ட