
குர்னா என்றதும்
குர்னா என்றதும்
எச்சரிக்கையாய் முதலில் ஒரு சொல்: இது அப்துல் ரஸாக் குர்ணா பற்றிய ஆய்வுக் கட்டுரையோ, தரவிறக்கிய தகவல் திரட்டோ அன்று. மிகவும் தன்வய நோக்கிலான ஒரு கட்டுரை; கட்டுரை எனக் கொண்டால்.
ஏதோ ஜிபிஎஸ் தேடி எனக்குக் குர்ணாவைக் காட்டிவிடவில்லை. அவரை நான் எதிர்பாராமல் கண்டடைந்தேன் என்றோ, அவரைத்தான் தேடிக்கொண்டிருந்தேன் என்றோ எல்லாம் சொல்ல முடியாது. அவரையும் தேடினேன் என்பது தெரியாமலேயே தேடிய பலருள் ஒருவராக அவ்வேளையில் அவரைச் சந்தித்தேன்.
சிறுவயதிலிருந்து கட்டங்கட்டமாய் முன்னேறிய வாசிப்பு, தமிழுக்கப்பால் சோவியத் ருஷ்ய இலக்கியங்களென்று என் இருபதுகளின் பின்னடியில் திரியவைத்த தீவிரம், ருஷ்ய மொழியைக் கொழும்பில் இரண்டரை ஆண்டுகளும், மாஸ்கோவில் இரண்டு மாதங்களும் பயிலவைத்தது. அப்போதுங்கூட நான் ஆபிரிக்க இலக்கி