நாம் ஹரப்பனின் குழந்தைகள்
டேவிட் ரீச்
பல நூறாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கும் முன்பு வாழ்ந்தவர்களின் பண்டைய மரபணுக்களை வெற்றிகரமாகச் சேகரித்து ஆராய்ந்ததன்மூலம் கடந்தகாலம் குறித்த நம் புரிதலில் புரட்சிகரமான ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார் அமெரிக்க மரபியல் ஆய்வாளரான டேவிட் ரீச். வரலாறு குறித்து நம்மிடம் நிலவும் தவறான புரிதல்களைத் திருத்திக்கொள்வதற்கும் புதிய கேள்விகளை எழுப்பி, புதிய கோணங்களில் கடந்தகாலத்தை ஆராய்வதற்கும் டேவிட் ரீச் அடிகோலியிருக்கிறார்.
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் மருத்துவத்துறையின் பேராசிரியராக இருக்கும் ரீச், தன்னுடைய பல்லாண்டு ஆய்வுத் தேடலின் பலனாக வெளியிட்ட ‘Who We Are and How We Got Here’ (2018) என்னும் நூல் உலகளாவிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்நூலை முன்வைத்து அவருடன் உரையாடும் கணேஷ் தேவி மொழி, பண்பாடு, தொன்மம், வர