
அத்தாட்சி
ஓவியங்கள்: செல்வம்
ஐ.எல். கராகியேல் (1852 - 1912) ருமானிய ஆசிரியர்களுள் பிரபலமானவர். புதுமையான முறையில் கருத்துச் செறிந்த கதைகள் எழுதுவதில் வல்லவர்.
ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் சைத்தான் கடவுளைப் பார்க்க வந்தான். சீக்கிரமாகவே தரிசனம் கிடைத்தது.
“புண்ணியர்களுக்கெல்லாம் புண்ணியரே! பிரபுவே! மனித வர்க்கத்தை நினைத்து நீங்கள் ஏன் மனசை அலட்டிக்கொள்ள வேண்டும்? உருப்படாத உதவாக்கரைகள்! உங்களுக்குத் தெரிந்த விஷயந்தானே அது? என்னிடம் கொடுத்துவிடுங்கள் அவர்களை! நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்களும் சனி ஒழிந்தது என்று கவலை இல்லாமல் இருக்கலாம். உதவாக்கரைகள்! அவர்களை வைத்துக்கொண்டு உங்களால் மன்றாட முடியாது... மோசம்! மகா ஞான சூன்யங்கள்” என்றான் அவன்.
ஆனால் கடவுள் அந்த