
பேக்கரிக்காரரே, பேக்கரிக்காரரே, எனக்காக ரொட்டி சுடுங்களேன்...
Courtesy: Home grown
சிவப்பு, மஞ்சள், நீலம், இளஞ்சிவப்பு, கருப்பு என விதவிதமான வண்ணங்களைச் சூடிக்கொண்டிருந்த அடிவானத்தின் காட்சி அப்போது முடியவில்லை. சாயும் சூரியனைப் பார்த்துக்கொண்டிருந்த எங்களுடைய கண்கள் சூரியனை ரசித்த வேளையில் வண்ணங்களை மாற்றியபடியிருந்த வானம் இன்னும் வசீகரமாயிருந்தது. நாங்கள் நன்றாக அதை உணர்ந்தோம். நாங்கள் இருவரும் எங்கள் இரு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு சிலநேரங்களில் கடற்கரைக்கு வருவோம். ஆனால் இன்று எங்களுடன் நாக்பூரிலிருந்து நான்கு நாட்கள் தங்கியிருக்க வந்த என்னுடைய மைத்துனர், அவருடைய மனைவி, பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதிமுடித்துவிட்ட அவர்கள் மகளும். மஞ்சரி கடற்கரைக் காட்சிகளையெல்லாம் பார்த்து மகிழ்ந்தாள். மாஜோர்டா கடற்கரைதான் எனக்கு மிகவும் பிடித்தமானது; விசாலமானது, அமைதியானது. ஆனால் இன்று கோல்