
குட்டி இளவரசனைச் சந்தித்த குழந்தைகள்
அந்துவான் செந்த் - எக்சுபெரியின் ‘குட்டி இளவரசன்’ நாவல் பிரதியைப் பட்டுப்பாதை நாடகக்குழுவினர் மணல்மகுடி நாடகநிலத்தில் 30-04-2022 அன்று மேடையேற்றினார்கள். வசந்த் செல்வத்தின் இயக்கத்தில் திரை/ நிகழ்த்துக் கலைஞர்கள் மாயாவும் லட்சுமிபிரியாவும் நடித்திருந்தனர்.
அந்துவான் செந்த் எக்சுபெரி பிரஞ்சில் எழுதிய இந்நாவலை வெ. ஸ்ரீராம் மூலமொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கிறார். உலகம் முழுவதிலும் கவனம்பெற்ற இந்த நாவல், சிறுவர்களின் பார்வையில் எழுதப்பட்டிருந்தாலும் பெரியவர்கள் தமக்குள் இருக்கும் குட்டி இளவரசனை அடையாளம் காணும்படி புனையப்பட்டிருக்கும். கட்டிறுக்கமான மனித வாழ்வை எளிமையான உரைநடை மூலம் தளர்த்தும் தனித்துவம் கொண்டது இந்நாவல். குட்டி இளவரசன் வினா எழுப்பி அவன் புரிந்துகொள்வதும் விமானிக்கு விழிப்பை ஏற்படுத்துவதும் இந்நாவலின் ஒரு கூறு. பாலைவனம், கிரகங்கள், விண்மீன்கள், பேசும் நரி,