ஜுன் 2022
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
ஜூலை 2022
    • கட்டுரை
      அமையுமா தேசிய அரசு?
      கண்டிராசன் கதை
      பள்ளிக்குள் ஊடுருவும் வன்முறை
      பள்ளிகளில் வன்முறை தீர்வு என்ன?
      பெருமரங்களும் புதிய செடிகளும் தமிழ்.விக்கி சர்ச்சைகளை முன்வைத்து ஓர் அலசல்
      வானமாமது
      கைமணலின் ஈரம்
      சல்மாவின் கதைகள்: உள்ளிருந்து விலகும் திரை
    • கதை
      அவுரி
      குட்டி இளவரசனைச் சந்திக்க குழந்தைகள்
      ஆன்லைன்
    • நினைவு
      எஞ்சிய சொற்கள்
    • துணைத்தலையங்கம்
      தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் அதீதமான எதிர்வினை
    • அஞ்சலி: யூசோப் காஜா
      யானைகளின் கலைஞன்
    • கண்ணோட்டம்
      பின்னை இட்ட தீ
    • எதிர்வினை
      சாமிநாதனும் சிவகுருநாதனும் அல்லது ஆபத்துக்கிடமான அபவாதம்
    • மதிப்புரை
      மக்களுக்கான அரசியலின் சினிமா
      காலம் அளந்த நாவல்
    • கவிதைகள்
      கவிதைகள்
      கவிதைகள்
    • தலையங்கம்
      எதிரிக்கு உதவும் கலை
    • அறிமுகம்
      ஆர்.பி. பாஸ்கரன் 80
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 50
  • ஆண்டுச் சந்தா ரூ. 425
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 725
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1500
  • காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 4,000

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு ஜுன் 2022 துணைத்தலையங்கம் தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் அதீதமான எதிர்வினை

தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் அதீதமான எதிர்வினை

துணைத்தலையங்கம்

பிரதமர் நரேந்திர மோடியையும் அம்பேத்கரையும் ஒப்பிட்டு இசையமைப்பாளர் இளையராஜா எழுதிய முன்னுரை கடுமையான சர்ச்சையை உருவாக்கியது. இளையராஜாவை விமர்சித்தும் ஆதரித்தும் வெளியான எதிர்வினைகள், பிரச்சினையைக் காட்டிலும் எதிர்வினை ஆற்றியவர்களைப் பற்றி நன்கு புரிந்துகொள்ள உதவின.

பொதுவாகவே இளையராஜாவின் கருத்துக்களை விரும்பாத பலரும் அவருடைய அபாரமான இசைத்திறம் கருதியும் தமிழ்ப் பண்பாட்டு வெளியில் அவருக்கு இருக்கும் இணையற்ற மதிப்பைக் கருதியும் அவரை விமர்சிக்கத் தயங்குவார்கள். சாதி அடிப்படையில் அவர்மீது ஒவ்வாமை கொண்ட சிலருக்கும் இதே சங்கடம்தான். மோடி – அம்பேத்கர் ஒப்பீட்டுச் சர்ச்சை இவர்களின் தயக்கத்தை உடைத்துவிட்டது. மடை திறந்த வெள்ளமாக அவதூறு, வசை மழைகள் பொழிந்தன. சாதிக் காழ்ப்பு, சாதி மேட்டிமை, இளக்காரம் ஆகியவை தாராளமாக வெளிப்பட்டன.

இளையராஜாவின் மீதான விமர்சனங்களில் காணப்பட்ட அதீதமான கோபம் மிகுதியும் சாதி மேட்டிமையிலிருந்து தோன்றியது என்று கருதக் காரணம் இருக்கிறது. அண்மையில் பழ. நெடுமாறன் இலங்கைப் பிரச்சினையில் மோடியை ஆதரித்துப் பேசியிருந்தார். மோடி அப்போது பிரதமராக இருந்திருந்தால் முள்ளிவாய்க்கால் படுகொலை நடந்திருக்காது என்று சொன்னார். இளையராஜா ஆழமான அரசியல் அறிவுக்கோ தெளிவுக்கோ பேர்போனவர் அல்லர். பொதுப் பிரச்சினைகள் குறித்து அவர் தெரிவித்துவரும் கருத்துக்கள் ஆழ்ந்த அரசியல் அறிவையோ அரசியல் சரித்தன்மையையோ கொண்டவை அல்ல. ஆனால் நெடுமாறன் அப்படி அல்ல. 90 வயதை நெருங்கும் மூத்த அரசியல்வாதி. காங்கிரஸ் கட்சியில் தன் அரசியல் வாழ்வைத் தொடங்கியவர். காமராஜர், இந்திரா காந்தி ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர். இந்திய, தமிழக அரசியலில் ஊறியவர். நெடுங்காலமாகத் தமிழ் தேசியர். இப்படிப்பட்டவர் மோடியை இலங்கையின் மீட்பராகச் சித்தரிக்கும்போது வராத கோபம் சமநிலையற்ற கருத்து வெளிப்பாடுகளுக்குப் பேர்போன இளையராஜாவின்மீது வரும் என்றால் அதற்கான காரணம் ஒன்றும் ரகசியம் அல்ல.

இளையராஜாவின் மீதான விமர்சனங்களில் சாதியுணர்வு வெளிப்படுவதற்கான எடுத்துக்காட்டாகத் தமிழக காங்கிரசின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் எதிர்வினையைச் சுட்டலாம். ‘உணவுக்கு வழியில்லாமல் இருந்த நிலையில் கம்யூனிஸம் பேசிவிட்டு பணமும் புகழும் வந்தவுடன் தங்களை உயர்ந்த ஜாதி என நினைத்துக்கொள்கிறீர்கள்’ என்ற ரீதியில் அவர் இளையராஜாவை விமர்சித்ததை வேறு எப்படியும் எடுத்துக்கொள்ள முடியாது. (இளையராஜா எப்போது கம்யூனிசம் பேசினார்?)

ஈரோட்டில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடந்த விழாவில்தான் இளங்கோவன் அப்படிப் பேசினார். சென்னையைச் சேர்ந்த புரட்சித் தமிழகம் நிறுவனத் தலைவர் ஏர்போர்ட் த. மூர்த்தி, இது தொடர்பாகத் தேசியத் தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகார் குறித்து விசாரணை செய்த ஆணையம், சென்னைப் பெருநகரக் காவல்துறை ஆணையருக்கும் சென்னை ஆட்சியருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸில், இந்த விவகாரத்தில் தொடர்புடைய கி.வீரமணி, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து 15 நாட்களுக்குள் அறிக்கை அளிக்கும்படி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸின் அடிப்படையில் கி.வீரமணி, ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து சென்னைப் பெருநகரக் காவல் துறையின் உயர் அதிகாரிகள் ஆலோசனை செய்துவருவதாகச் செய்தி வந்தது. இளங்கோவன் இளையராஜாவைத் தாக்கியபோது வீரமணி கைதட்டிய காணொளியும் வெளியாகியுள்ளது. மேடையில் பேச்சாளர் குரலை உயர்த்தும்போது கைதட்டும் சடங்கை வீரமணி நிறைவேற்றுவதற்கு அதிக முக்கியத்துவம் தரவேண்டியதில்லை எனினும் அவர் இதுவரை விளக்கம் எதுவும் அளிக்காமல் இருப்பது விமர்சனத்திற்கு உரியதுதான்.

தேசியத் தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் ஒருவர் புகார் அளித்ததோ அந்தப் புகார் மீது ஆணையம் நடவடிக்கையை முன்னெடுத்ததோ தவறில்லை. ஆனால் இந்தக் குற்றச்சாட்டில் வீரமணியையும் சேர்த்ததன் மூலம் இளையராஜாவின் விமர்சகர்கள் சிலர் செய்யும் அதே தவற்றை ஆணையம் செய்துள்ளது. அதாவது, எடுத்துக்கொண்ட பிரச்சினைக்குத் தொடர்பில்லாத அதீதமான எதிர்வினையை அது ஆற்றியுள்ளது. இளையராஜாவை அவதூறு செய்து பேசியவர் இளங்கோவன். ஆனால் அந்த மேடையில் இருந்த காரணத்திற்காக வீரமணியின் மீதும் நடவடிக்கை எடுக்க தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் முனைவதற்குக் காரணம் வீரமணிமீது ஆணையத்திற்கு (அதாவது அதை இயக்குபவர்களுக்கு) இருக்கும் விரோதம் அல்லது எதிர்ப்புணர்வே என்றுதான் சொல்ல வேண்டும்.

தாழ்த்தப்பட்டோருக்கான குரல் என்ற அளவுகோலின் அடிப்படையில் திராவிடர் கழகத்தின்மீது விமர்சனங்கள் உள்ளன. தலித் தரப்பைச் சேர்ந்தவர்கள் அவற்றைத் தெளிவாக முன்வைத்திருக்கிறார்கள். ஆனால் தி.க.வையோ அதன் தலைவர் வீரமணியையோ தாழ்த்தப்பட்டோருக்கு எதிரி என்று சொல்ல முடியாது. எத்தனையோ பிரச்சினைகளில் தாழ்த்தப்பட்டோர் தரப்பில் நின்று தி.க. குரலெழுப்பியிருக்கிறது. வாஜ்பேயி தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அருண்ஷோரி பாஜகவில் சேருவதற்கும் முன்பே அம்பேத்கரைக் கடுமையாக விமர்சித்து Worshiping False Gods என்னும் நூலை எழுதினார். அந்த நூலின் உள்ளடக்கத்தைப் பலரும் கடுமையாக விமர்சித்தார்கள். தி.க. தலைவர் கி. வீரமணி இயக்கத்தின் நாளேடான விடுதலையில் அருண்ஷோரியின் நூலுக்கான மறுப்பை எழுதி அதைத் தொடராக வெளியிட்டதோடு மட்டுமின்றிப் பிறகு அதை நூலாகவும் வெளியிட்டார். இத்தகைய காத்திரமான எதிர்வினையை வேறு யாரும் ஆற்றவில்லை. மேலும், அம்பேத்கர் பிறந்த நாளைப் பல ஆண்டுகளாகத் தி.க. கொண்டாடிவருகிறது. இன்றைய சூழலில் சாதி ஒழிப்பைப் பற்றித் தொடர்ந்து பேசிவரும் இயக்கங்களில் ஒன்று தி.க.

இத்தகைய பின்புலம் கொண்ட ஒருவர்மீது சாரமற்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் தேசியத் தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நடவடிக்கையை முன்னெடுத்திருப்பது அவர் மீது ஏற்கெனவே இருக்கக்கூடிய காழ்ப்பின் வெளிப்பாடு என்றுதான் சொல்ல வேண்டும். இளங்கோவன் பேசியதைப் பகிரங்கமாகக் கண்டிக்கவில்லை என்னும் விமர்சனத்தை வீரமணிமீது வைக்கலாம். ஆனால் அது சட்டப்படி தண்டிக்க வேண்டிய குற்றம் அல்ல. இத்தகைய அதீதமான, நியாயமற்ற நடவடிக்கைகள் தேசியத் தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மையைக் குறைக்கவே பயன்படும் என்பதைக் கருத்தில் கொண்டு வீரமணியின் மீதான நடவடிக்கையை ஆணையம் திரும்பப் பெறுவதே நியாயமானதாக இருக்கும்.

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.