
பெருமரங்களும் புதிய செடிகளும் தமிழ்.விக்கி சர்ச்சைகளை முன்வைத்து ஓர் அலசல்
சில திரைப்படங்கள் வெளியாவதற்கும் முன்னாலேயே அவற்றைச் சர்ச்சைகள் சூழ்ந்துகொள்ளும். இதனால் படத்தைக் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாவதும் உண்டு. ஜெயமோகன் முன்னெடுத்திருக்கும் தமிழ்.விக்கி எனும் தளத்திற்கும் (https://tamil.wiki) இது ஏற்பட்டது. இது ஒரு கலைக் களஞ்சியம். இதன் தொடக்க விழா மே ஏழாம் தேதி வாஷிங்டனில் நடந்தது. சர்ச்சைகள் அதற்கும் முன்பே தொடங்கி விட்டன.
அழைப்பிதழில் ஜானகிராமன், ஜானதன் ரிப்ளி, டைலர் ரிச்சர்ட், செல்வக்குமார் ஆகிய அமெரிக்கக் கல்வியாளர்களின் பெயர்கள் இருந்தன. இவர்களில் விஜய் ஜானகிராமன் ஒரு மருத்துவர், இதய சிகிச்சை நிபுணர், ஹார்வர்ட் தமிழ் இருக்கை அமைத்ததில் முக்கியமானவர். முனைவர் ஜானதன் ரிப்ளி, முனைவர் டைலர் ரிச்சர்ட் இருவரும் முறையே ஹார்வார்டு, கொ