ஊர்சுற்றி
ஓவியங்கள்: பி.ஆர். ராஜன்
உணர்ச்சி என்பது ஒருவகைத் தேடல், தொண்ணூற்று எட்டாம் பக்கத்தில் படித்தேன். ஆனால் நாவலின் ஏனைய பகுதிகள்போல இச்சொற்றொடர் ஏனோ என்னுள் எதிரொலித்து அதிர்வுறவில்லை.
நான் ஹீத்ரோவில் இருக்கிறேன். எதையும் கடைசி நேரத்தில் பார்த்துக்கொள்ளலாம் என்ற மாறாத எனது இயல்புக்கு ஒவ்வாத வகையில் சீக்கிரமே வந்துவிட்டிருந்தேன். வெளிக் கதவுக்கு முன் அமர்ந்து காத்திருந்தபடி வாசிப்பிலும் மூழ்கிவிட்டேன். உலகின் எல்லா விமான நிலையங்களும் ஒரே விமான நிலையம்தான். என்னிடம் நல்ல புத்தகம் இருக்கிறது. புத்தகக் கடையைத் தேடிப்போய்ப் பேருக்கு ஏதோவொன்றை வாங்கியாக வேண்டிய அவசிய மில்லை. உதாரணத்துக்கு உங்களது பயணப்பொதிக்கு எடை கூட்டாத, படித்துவிட்டுத் தூக்கியெறிந்து விடக்கூடிய சஞ்சிகைகளை அல்லது புத்தகங் களை வாங்கத் தேவை யில்லை, ஏனென்றால் இரண்டு விமானப் பயணங்களுக்கு நடுவில் இதர உலகங்