எல்லைகளைத் தகர்த்தெறியும் பெண்ணியம் சர்வதேச புக்கர் பரிசு 2022: கீதாஞ்சலி ஸ்ரீயின் ‘மண் சமாதி
இந்த ஆண்டு சர்வதேச புக்கர் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்ட கீதாஞ்சலி ஸ்ரீ யின் ‘மண் சமாதி’ (Tomb of Sand)க்கும், இதே பரிசுக்காகக் குறும்பட்டியலில் இடம் பெற்றிருந்த குளோடியா பிஞ்ஞேரோவின் ‘எலனா வுக்குத் தெரியும்’ (Elena Knows) என்னும் ஸ்பானிஷ் நாவலுக்குமிடையே சில ஒற்றுமைகள் உண்டு. இவ்விரு நாவல் களிலும் வயது முதிர்ந்த ஒரு தாய்க்கும் அவரைப் பராமரிக்கும் அவரின் மகளுக்கும் இடையே நிலவும் உறவுகள் முன்னிலைப் படுத்தப்படுகின்றன. அடுத்ததாக, இரண்டிலும் பெண்ணியப் பார்வை மேலோங்கி இருக்கின்றது.
இதுபோன்ற சில ஒற்றுமைகள் இருப்பினும், இரண்டு நாவல்களும் வெவ்வேறு திசை களில்தான் நகர்கின்றன. வீச்சாலும் உள்ளடக்கத்தாலும், ‘மண் சமாதி’ ஸ்பானிஷ் நாவலைப் பின்னுக்