மிதாலி என்னும் துருவ நட்சத்திரம்
மிதாலி ராஜின் ஓய்வு அறிவிப்பை கிரிக்கெட் சமூகம் எதிர்கொண்ட விதம் உண்மையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது; விஸ்டன், கிரிக்இன்ஃபோ, கார்டியன் போன்ற முன்னணி கிரிக்கெட் தளங்கள் வழக்கமாக ஓய்வை அறிவிக்கும் ஆண் கிரிக்கெட் நட்சத்திரங்களுக்குக் கொடுக்கும் முக்கியத் துவத்தை மிதாலிக்குத் தர மறுத்ததில் பெரிய ஆச்சரியம் ஒன்றுமில்லை; என்றபோதும், சச்சின் டெண்டுல்கர் ஓய்வுபெற்றபோது பிரத்யேகமாகக் கட்டுரைகளை வெளியிட்ட கிரிக்இன்ஃபோ தளம் ஓரிரு கட்டுரைகளுடன் தன் கடமையை முடித்துக்கொண்டது. மிதாலியின் வரலாற்று முக்கியத்துவத்தையும், அவருடைய மட்டையாட்டத் தொழில்நுட்ப அம்சங்கள் குறித்த பார்வையையும் தொலைக்காட்சி விவாதங்களோ செய்திக் கட்டுரைகளோ தொட்டுச் செல்லவில்லை.
நிறுவனங்கள்தான் இப்படியென்றால் ரசிகர்களும் தங்கள் பங்கிற்கு மிதாலிக்கு மரியாதை செலுத்துகிறோம் என்ற பெயரில் முடிந்தவரைக்கும் அவருடைய முக்கியத்துவத்தை மட