ஜனவரி 2023
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
பிப்ரவரி 2023
    • கட்டுரை
      வன்நினைவின் நிலம் - சேரன் கவிதைகளில் புதிய திணை
      இங்கிவரை நாம் பெறவே...
      ஈழ ஆஸ்திரேலிய நாடகம்: “எண்ணிக்கை இல்லையெல் கையோங்கு”
    • கதை
      நிலைக்கண்ணாடி
      நினைப்பு
      நீடூழி
    • திரை: விட்னெஸ்
      பார்வையாளர்கள் எனும் திறனற்ற சாட்சிகள்!
    • சுரா பக்கங்கள்
      சிவராமனுக்கு எழுதிய கடிதங்கள் - 5
    • நேர்காணல்: ஆழி செந்தில்நாதன்
      செந்தமிழிலிருந்து செய்தமிழுக்கு
    • அஞ்சலி: எஸ்.பி. சீனிவாசன் (1927 - 2022)
      வண்ணம் சூழ் தூரிகை
    • சிறப்புப் பகுதி: இன்றும் காந்தி
      இன்றும் சாதியவாதியா?
      காந்தியின் அறிவியல்
      தீண்டாமை யாத்திரையில் ஒடுக்கப்பட்டோரின் குரல்
      நுகர்வுக்கால காந்தி
      இந்தியாவுக்கு அப்பால்
      உலகத்திற்கு ஒரு கடைசி வாய்ப்பு
    • பதிவு
      சாகித்திய அகாதெமியின் மொழிபெயர்ப்பு விருதுகள்
      பாரதி விருதுகள் - 2022
    • அஞ்சலி: நாரணோ ஜெயராமன்
      பாசாங்கற்ற ஓர் இருத்தலிய ஆத்மார்த்தம்
    • புத்தகப் பகுதி
      காற்று வெளியிடை...
      யாழ்ப்பாணப பார்வை
      “கூடார்த்தச் சித்திரங்கள்”
      போர் என்பது போர்க்களத்தில் மட்டும் நடப்பதல்ல
      மரணச் செய்தி...
    • மதிப்புரை
      வரலாற்றை வாசிக்கும் விதம்
    • கவிதைகள்
      எம். யுவன் கவிதைகள்
      களம்
      சரண்மனோன் கவிதைகள்
      சக்திஜோதி கவிதைகள்
    • தலையங்கம்
      இன்றும் காந்தி
    • பதிவு: ஷார்ஜா பன்னாட்டுப் புத்தகக் காட்சி - நவம்பர் 2022
      வார்த்தைகளைப் பரப்புவோம்...
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 50
  • ஆண்டுச் சந்தா ரூ. 425
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 725
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1500
  • காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 4,000

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு ஜனவரி 2023 அஞ்சலி: எஸ்.பி. சீனிவாசன் (1927 - 2022) வண்ணம் சூழ் தூரிகை

வண்ணம் சூழ் தூரிகை

அஞ்சலி: எஸ்.பி. சீனிவாசன் (1927 - 2022)
சண்முகராஜா

 

பேராசிரியர் எஸ்.பி. சீனிவாசன் தமிழ் நவீன நாடக முன்னோடி. 1927 டிசம்பர் 4இல் மதுரையில் பிறந்தவர். விடுதலைப் போராட்ட உணர்வால் பள்ளிப் படிப்பை உதறியவர். இளமைப் பருவத்தில் கலையார்வம் மிகுந்திருந்தவர். விடுதலைப் போராட்ட உத்வேகத்தில் காங்கிரஸ் கட்சிக்காகச் சுவரோவியங்கள் வரைகிறார். அவரது ஓவியங்கள், கலைச் செயல்பாடுகளில் வெகுவாக ஈர்க்கப்பெற்ற பெருந்தலைவர் காமராசர் எஸ்.பி.எஸ்ஸைக் கலை பயில தாகூரின் சாந்தி நிகேதனுக்கு அனுப்பிவைக்கிறார். அங்கு நந்தாலால் போஸிடம் பயில்கிறார். சாந்தி நிகேதனின் அனுபவச் செழுமையோடு அடையாறு கலாசேத்ராவிற்கு வருகிறார். அங்கு ருக்மணி அருண்டேலுடன் பணிபுரியும் வாய்ப்பு பெறுகிறார். தமிழ்த் திரைப் படங்களில் கலை இயக்கப் பிரிவில் பணியாற்றும் சந்தர்ப்பங்களும் கிடைக்கின்றன. மேற்கண்ட பணிகளினூடாக நாடகத்தின் மீது ஏற்பட்ட ஆர்வத்தால் ‘ஏசியன் இன்ஸ்ட்டிட்டுயூட் ஆப் தியேட்டர்’ என்ற நிறுவனத்தில் பயில்வதற்குப் புதுதில்லி செல்கிறார். அந்நிறுவனமே பின்னர் தேசிய நாடகப் பள்ளியாக மாறுகிறது. அங்கு நாடகம் பயின்ற முதல் தமிழக மாணக்கர்கள் எஸ்.பி. சீனிவாசனும் என்.வி. ராஜமணியும் ஆகும். பேரா. ராமானுஜம், கோபாலி ஆகியோர் தேசிய நாடகப் பள்ளியாக மாறிய பிறகு இப்ராஹிம் அல்காசியிடம் மாணவர்களாகிறார்கள்.

ஏசியன் இன்ஸ்ட்டிட்டுயூட் ஆப் தியேட்டரில் கலை நுட்பங்களைக் கற்ற பேராசிரியர் காந்தியச் சிந்தனைகளின்பால் ஏற்பட்ட தாக்கத்தால் காந்தி கிராமப் பல்கலைக்கழகத்திற்கு கலை ஆசிரியராகப் பொறுப்பேற்கிறார். அங்கு பேரா. ராமானுஜமும் எஸ்.பி.எஸ்ஸும் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பு அமைகிறது. நாடக இணையர்கள் இருவரும் கதராடையோடு தமிழகம் முழுவதும் பயணப்பட்டு நாடகப் பயிலரங்குகளை நடத்துகிறார்கள்.

நாடகப் பயிலரங்குகளுக்குப் பிரத்யேகப் பாடத்திட்டம், தேசிய அளவிலான தேர்ந்த பயிற்றுநர்கள், பயிலரங்க இறுதியில் கற்றுக்கொண்டதைப் பயன்படுத்தி நாடகத் தயாரிப்பு என்ற முறைமையை உருவாக்கினார்கள். இவர்கள் உருவாக்கியது தேசிய நாடகப் பள்ளியின் தாக்கத்தால் ஏற்பட்டது. தமிழ்நவீன நாடகத்தில் இரண்டு போக்குகள் ஆரம்பக் காலகட்டங்களைத் தீர்மானித்தன.

1. தேசிய நாடகப் பள்ளியின் காந்தி கிராமப் பல்கலைக்கழகப் பயிலரங்கில் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளில் பேராசிரியர்கள் இருவரும் அதற்கு முதன்மையாக வித்திட்டவர்கள் ஆனார்கள்.

2. பாதல் சர்க்காரின் சோழமண்டலப் பயிலரங்கின் வழிவந்த முயற்சிகள். மேற்கண்ட இரண்டு போக்குகளும் பயிலரங்குகள், நாடக விழாக்கள், கலைச் செயல்பாடுகள் மூலம் நவீன நாடக இயக்கத்தைச் செழுமைப்படுத்தின. ஏனெனில் இரண்டாம் தலைமுறை நாடகக்காரர்கள், மேற்கண்ட இரண்டு பயிலரங்குகளிலிருந்தும்தான் உருவானார்கள்.

நவீன நாடகத்திற்கு அற்புதமான தொடக்கத்தை ஏற்படுத்தியதோடு இரண்டாம், மூன்றாம் தலைமுறை நாடக ஆளுமைகள் உருவாவதற்கான அடித்தளங்களையும் பேராசிரியர்கள் இருவரும் அமைத்துக்கொடுத்தார்கள். இந்த அடிப்படை உருவாக்கங்கள் ஓர் இரவில் நடந்துவிடவில்லை; பேராசிரியர் இருவரின் அர்ப்பணிப்பான தொடர்பணிகளால் மட்டுமே சாத்தியப்பட்டன. பேராசிரியர்கள் ஓய்வாக இருந்து நாங்கள் பார்த்ததில்லை. மாதம் முழுவதிற்குமான அட்டவணைகளோடுதான் அவர்களின் நாடகப் பணிகள் அமைந்திருந்தன.

பேராசிரியர்கள் இருவரின் இணைப்பு மிகக் கச்சிதமானது. பேரா. ராமானுஜம் இயக்குநர் அல்லது நெறியாளர் என்றால் பேரா. எஸ்.பி. சீனிவாசன் வடிவமைப்பாளர் அல்லது அரங்கியலாளர். பேரா. ராமானுஜத்தின் கருத்தாக்கக் கற்பனைகளை பேரா. எஸ்.பி.எஸ். மிக நேர்த்தியாக அரங்கப்படுத்திவிடுவார். முழுமை அரங்கம் என்ற வார்த்தை எஸ்.பி.எஸ் இல்லையென்றால் முழுமையடையாது.

எஸ்.பி.எஸ். நாடக உடை, ஒப்பனை, அரங்கப் பொருள்கள், அரங்க நிர்மாணம், ஒலி ஒளி ஆகிய அனைத்து அரங்கக் கூறுகளிலும் விற்பன்னர். காட்சிப்படிமங்களில் புலமை பெற்றவர். “புழக்கத்தில் இருக்கும் பேச்சுக்கலைகளில் காணும் கருத்துப்படிமங்கள் சூட்சும வடிவம் கொண்டவை. வற்றி முழுப் பரிமாணங்களும் மக்களுக்குப் போய்ச் சேர்வதில்லை. அதே கருத்தை நடிப்பின் மூலம் காட்சிப் படிமங்களாக மேடையில் மாற்றும்போது ஸ்தூல வடிவம் கொள்கிறது. ஸ்தூல வடிவங்களிலிருந்து கிடைக்கும் அனுபவ நிலைகள் சிறந்தது” எனக் குறிப்பிடுவார். சர்வதேச அளவில் நாடக நெறியாக்கம், வடிவமைப்பு, நடிப்பில் பயின்றும்வரும் சிந்தனைகள் பற்றிய பிரக்ஞை கொண்டவர். அந்தச் சிந்தனைகளை அடுத்த தலைமுறைக்குப் படைப்பு நுணுக்கங்களோடு கைமாற்றிவிட வேண்டும் என்ற அக்கறை அவரது செயல்பாடுகளில் வெளிப்படுவதை நான் அருகிலிருந்து கவனித்திருக்கிறேன்.

அரங்க வடிவமைப்பு நிர்மாணத்தில் விற்பன்னரான பேராசிரியர் ‘நாயைப் பறிகொடுத்தோம்’ போன்ற பல்வேறு நாடகங்களை எழுதியுள்ளார். அரங்கப் பரிமாணங்கள், படிமங்கள் குறித்த கட்டுரைகள் எழுதியுள்ளார். வண்ணங்கள், வடிவமைப்புக் குறித்து நூல்கள் எழுதியுள்ளார். அவரது இயக்கத்தில் வெளிவந்த நாடகங்கள் பெரும்பாலானவை குழந்தைகளுக்கானவை. பேராசிரியர் இயக்கிய நாடகங்கள் அதிகம் பயிலரங்கத் தயாரிப்புகள். அவரது நெறியாக்கம் முற்றிலும் வித்தியாசமான அணுகுமுறைகளைக் கொண்டது. கதாபாத்திரங்கள், சம்பவங்கள், உரையாடல்கள்வழி பயணப்படுவதிலிருந்து மாறுபட்டுக் காட்சிப் படிமங்கள் சார்ந்து வடிவமைப்புக் கூறுகளின் வழி பயணப்படுவார். இந்தப் பயணப்படுதல் குழந்தைகளின் அகவுலகிற்கு நெருக்கமானது. வண்ணங்கள் பற்றிய சிலாகிப்பு எப்பொழுதும் அவரிடம் உண்டு. வண்ணங்களைக் கையாளும்பொழுதும் அது தொடர்பாகப் போதிக்கும்பொழுதும் ஓர் இனம்புரியாத குதூகலம் அவரைத் தொற்றிக்கொள்ளும். ஒருபோதும் வண்ணங்களை அவரிடமிருந்து பிரித்துவிட முடியாது. குழந்தைகளின் அகவுலகிற்கு அவர் வண்ணங்கள் சூழ்ந்த தூரிகையாகவே திகழ்ந்தார்.

எஸ்.பி.எஸ்.ஸோடு ‘நாயைப் பறிகொடுத்தோம்’ நாடகத் தயாரிப்பில் அந்த நாடகத்தின் தலைப்பு பற்றி வினவியபோது ‘நாய்’ ஓர் உருவகம். மனிதன் நெருக்கடியான சமூகச் சூழலில் தனக்குள் இருக்கும் பொக்கிஷங்களை பறிகொடுக்கிறான். நாயைப் பறி கொடுத்தல் என்றால் அது கருணை, தியாகம் போன்ற மனித மாண்புகளைப் பறிகொடுப்பது என்றார். ஜி. நாகராஜன் கூட மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பயல். என்பார். நூற்றாண்டுகள் வாழ்ந்த மனிதனை, மனித சமூகத்தை ஒரு படைப்பாளி சல்லிப்பயலெனச் சுட்டுவது மாண்பிழந்துபோவதன் துயரத்தைத்தான். மனிதச் சமூகம் பறிகொடுத்து அலைவதைப் பார்த்துப் பதற்றமடைவதும் பரிதவிப்பதும் படைப்பாளிகளின் இயல்பாகிறது. நேர்மையான, உண்மையான படைப்பாளியை மனித மாண்பிழத்தலின் துயரம் அலைக்கழிக்கிறது. எதிர்காற்றில் பயணிப்பதுபோல் ஒவ்வொரு படைப்பாளியும் மனித குலத்திற்காகப் போராடுகிறான். காலம் போராடுவதையும் விடைபெறுதலையும் படைப்பாளிக்கு முன்வைத்தபடியே நகர்கிறது. எஸ்.பி. சீனிவாசன் சார் விடைபெற்றுக்கொண்டார்.

                   மின்னஞ்சல்: nigazh@gmail.com

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.