களம்
களம்
ஆடுகளத்துக்குமேல் கவிந்திருக்கும்
அகண்ட வானை…
ஆயிரம்ஆயிரம்குரல்கள்முட்டுகின்றன
முட்டிமோதி
ஒரேகுரலாகக்கீழிறங்குகின்றன
ஆயிரம்ஆயிரம்இதயங்கள்படபடக்கின்றன
படபடப்பில்கரைந்து
ஒரேதுடிப்பாகமுழங்குகின்றன
11 x 2 x 2 கால்களுக்குஇடையில்
இங்கும்அங்கும்பந்துஉருள்கிறது
ஒருபந்தைவிரட்டுவது
11 x 2 x 2 கால்கள்மட்டுமல்ல
எழாமல்எழும்பல்லாயிரம்கால்கள்
ஒருபந்தின்பின்னால்ஓடுவது
இரண்டு அணிகள் மட்டுமல்ல
ஓடாமல்ஓடும்பல்லாயிரம்இதயங்கள்
ஒருஆட்டக்காரனைத்தட்டுவது
ஒருகுரல்மட்டுல்ல
ஒருபொருள்கொண்டபலமொழிக்குரல்கள்
வெற்றிக்கும்தோல்விக்கும்நடுவில்உருண்டபந்து
ஆட்டம்முடிந்ததும்
வலைநிழலில்இளைப்பாறுகிறது
இப்போதுஅதற்கு
வெற்றியிலும்தோல்வியிலும்திரளும்
கண்ணீர்த்துளியின்ஆகிருதி.
என்ன,
வென்றவனின்கண்ணீர்த்துளி
உலகளவுசிறியது.
தோற்றவனின்கண்ணீர்த்துளி
பந்தளவுபெரியது.