ஆம், இது இன அழித்தொழிப்புதான்
காஸா மீதான இஸ்ரேலின் போரைக் கடுமையாக விமர்சிப்பவர் இஸ்ரேலிய வரலாற்றாசிரியர் அமோஸ் கோல்ட்பெர்க். இப்போரை இன அழித்தொழிப்பு (genocide) என்றே அழைக்கிறார். இவ்வாறு அழைப்பது ஏன் சரி என்று கூறும் அவர், இந்த யதார்த்தத்தை ஏன் சர்வதேச சமூகம் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் விளக்குகிறார்.
அக்டோபர் 7ஆம் தேதி ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களை ஹமாஸ் படுகொலை செய்தது. கடந்த இந்த ஒன்பது மாதங்களில் (2024 ஜூன் மாதம் எடுக்கப்பட்ட நேர்காணல்) பாலஸ்தீனத்தில் எதுவும் முடிவுக்கு வருவதாகத் தெரியவில்லை. ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்த அனைவரையும் ஒழிப்பது என்ற பெயரில் நடத்தப்படும் இஸ்ரேலின் இந்தப் போர் காஸாவின் பெரும் பகுதியைத் தரைமட்டமாக்கிவிட்டதுடன் பல்லாயிரக்கணக்கானவர்களையும் கொன்று குவித்திருக்கிறது. கொல்லப்பட்டவர்களில் மிகப் பெரும்பாலானவர்கள் சாதாரணக் குடிமக்கள். நாளையே போர் முடிவுக்கு வருமென்றாலும் அடுத்த பல ஆண்டுகளுக்கு காஸாவில் யாரும் வாழ முடியாது.
<p