ஆவாராவும் சோஷலிசமும்
2024 டிசம்பர் 14, இந்திய வெகுமக்கள் திரைப்பட உலகின் மேதையாக விளங்கிய ராஜ் கபூரின் நூறாவது பிறந்த நாள். இந்திய இடதுசாரித் திரைப்பட இயக்கத்தின் முக்கியப் பிரதிநிதியாகவும் உலகளவில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படக் கலைஞராகவும் விளங்கிய கபூர் ‘ஆவாரா’ திரைப்படத்தை இயக்கி நடித்ததன் மூலம் சீனாவில் பெரும் புகழைப் பெற்றார். ஆவாரா சீனப் பார்வையாளர்கள் முதன்முதலில் பரவலாக ஏற்றுக்கொண்ட இந்தியத் திரைப்படம் ஆகும். அதனையடுத்து, 20ஆம் நூற்றாண்டின் ஐம்பதுகளில் ‘சீனா-இந்தியா சகோதரர்கள்’ என்ற நட்புறவின் சின்னமாகவும் இப்படம் அமைந்தது.
இருபதாம் நூற்றாண்டின் 50ஆம் ஆண்டுகளில், இந்தியா சமூகவாதச் சிந்தனையை (சோஷலிசச் சிந்தனையை) நாட்டின் கட்டமைப்பில் இணைக்க முயன்றதோடு மட்டுமல்லாமல் சோவியத் யூனியனுடன் நெருக்கமான ஒத்துழைப்பையும் இந்தியா பேணியது. அதே சமயம், சோவியத் யூனியனுடன் ஒரு பக்கச் சார்பு என்ற வெளிநாட்டுக் கொள்கையின் வழிகாட்டுதலின் கீழ் சோவியத் யூனியனிடம் கற்றுக்கொள்ளும் ஆர்வத்தைச் சீனா உருவாக்கிக்கொண்டது. இதனிடையில், ஆசி