சு.ரா. கடிதங்கள்
சுந்தர ராமசாமி
நாகர்கோவில்,
19.5.1998.
அன்புள்ள சிவராமன்,
உங்கள் 15. 05. 98 கடிதம்.
குட்டிக்கானம் போக வேண்டும் என்று இதற்கு முன் பல தடவை பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால் போக சந்தர்ப்பம் வாய்க்கவே இல்லை. இந்த வருடம் நாம் இருவரும் அங்கு போக சந்தர்ப்பம் வாய்க்கும் என்று நம்புகிறேன். இரண்டொரு நாட்கள் தங்க முடிந்தால் நன்றாக இருக்கும்.
ஜி. நாகராஜனின் நாவலைப் பின்னால் பெற்றுக்கொள்கிறேன். அவசரமில்லை.
திலீபிடமிருந்து கடிதம் வரவில்லை. நாம் பார்க்க வேண்டிய மொழிபெயர்ப்புப் பிரதிகள் வந்து சேர நாளாகும் என்று நினைக்கிறேன். மொழிபெயர்ப்பாளர்கள் இறுதியான ஒரு பிரதியைத்தான் நமக்கு அனுப்புவார்கள். இதை ஒழுங்குசெய்ய அவர்களுக்கு நேரமாகும் என்று நினைக்கிறேன்.
என் நாவலை நீங்கள் படித்துப் பார்க்க வேண்டும். முனைப்பாகப் படித்தால் நாலைந்து நாட்களில் படித்துவிடலாம். நுஃமான் இங்கு 20 / 21 தேதி வாக்கில் வந்துவிட்டு 25 / 26 தேதி வாக்கில் போகவிருக்கிறார். தைலா அடுத்த மாதம