நவம்பர் 2018
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
அக்டோபர் 2025
    • கட்டுரை
      ஓநாய்களை ஓடவிரட்டும் தருணம்
      அன்னா பெர்ன்ஸின் 'பால்காரன்'
      மொழி காலத்தின் பிரதிநிதி, 4ஜி கதைகள் & 3டி பார்வை
      மீட்கப்பட்ட செப்புச்சிலைகள்
      காந்தியால் பிறந்த தலித்துகளுக்கான பள்ளிகள்
    • கதை
      மூன்று சம்பவங்கள்
      ஏழூ முப்பத்தாறு
      மயக்கம் தெளிந்தபிறகு
      கலையரசி
      வரையறுத்தல்
      இமய விடியல்
    • EPW பக்கங்கள்
      கோயில் நுழைவுச் சிக்கலும் நடைமுறை அரசியலும்
      பெண்களை எப்படி நம்புவது?
    • திரை
      பரியேறும் பெருமாள்: தமிழ்த்திரையில் தெற்கு
      மனைவி
    • கடிதங்கள்
      கடிதங்கள்
      எதிர்வினை: த. உதயச்சந்திரன் பார்வைக்கு
    • கவிதைகள்
      அவமானம், ஒரு குடிமகனின் குறிப்புகள் , தளும்பும் கணம்
      இரவுப் பிராணி, அறைகளின் விடுதலை
      ஆயிரமாயிரம் ஆண்டுகள் கடந்துவந்த சாலைகள்
    • தலையங்கம்
      மறுக்கப்படும் பொதுவெளிகள்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு நவம்பர் 2018 EPW பக்கங்கள் பெண்களை எப்படி நம்புவது?

பெண்களை எப்படி நம்புவது?

EPW பக்கங்கள்
க. திருநாவுக்கரசு

 

இதுவரை ஆணாதிக்க மொழியில் மட்டுமே புரிந்துகொள்ளப்பட்டிருந்த தங்களது அனுபவங்களை மாற்றியமைக்க பெண்கள் பேசத் தொடங்கியுள்ளனர்.

கடந்த வாரம் இரண்டு பெண்கள் தங்களுக்கேற்பட்ட பாலியல் பலாத்கார அனுபவங்களை மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டியதாயிற்று. அமெரிக்காவில் உளவியல் பேராசிரியராக இருக்கும் கிறிஸ்டைன் பிளாசி ஃபோர்ட், 1982இல் பதின்வயதுகளில் இருந்தபோது உச்ச நீதிமன்ற நீதிபதியாக இப்போது பரிந்துரைக்கப்பட்டுள்ள பிரெட் எம் கவனாக் தன்னைத் தாக்கியதாக சாட்சியம் அளித்தார். 2008இல் படப்பிடிப்புத் தளத்தில் தன்னை நடிகர் நானா படேகர் தொந்தரவு செய்ததாகவும் அதைத் தொடர்ந்து தன்னைத் திரைப்படவுலகை விட்டே வெளியேற்றியதாகவும் தனுஸ்ரீ தத்தா மும்பையில் ஒரு தொலைக்காட்சிச் சானலில் கூறியுள்ளார்.

இந்தப் பாலியல் தொந்தரவுகளுக்குக் காரணமாக இருந்தவர்களின் வன்முறைக்கு அப்பால் செல்கிறது இந்தச் சாட்சியங்களின் முக்கியத்துவம்.  #விமீஜிஷீஷீ (#நானும்கூட) இயக்கத்தைத் தொடர்ந்து பல பெண்கள் கூறும் அனுபவங்களின் பொதுவடிவத்துடன் இது ஒத்துப்போகிறது. பாலியல் 

தொந்தரவுகள் கொடுப்பவர்களைக் காப்பாற்றுவதாக, அவர்களுக்கு மேலும் துணிச்சலைக் கொடுப்பதாக தினசரி வாழ்க்கையின் கட்டமைப்புகளும் பரஸ்பர ஒத்துழைப்பும் இருப்பதே இந்தப் பொது வடிவம். பாலியல் தொந்தரவு மிகப்பெரும் குற்றம் என்றபோதிலும் அது ஒரு வழக்கமான செயலாகக் கருதப்படுகிறது. ஆண்களுக்கு இருக்கும் அதிகாரம், தண்டனையிலிருந்து அவர்களுக்குக் கிடைக்கும் விலக்கு ஆகியவற்றின் வெளிப்பாடே இது. குடித்திருக்கும் ஓர் உயர்நிலைப் பள்ளி பதின்வயது மாணவனுக்கும் அரசியல் ஆதரவுள்ள ஒரு 

நடிகருக்கும் தண்டனை கிடைப்பதிலிருந்து பாதுகாப்பு கிடைப்பது அதிர்ச்சி தரத்தக்க அளவில் அதிகமாக இருக்கிறது.

தாங்கள் சொல்வது காதுகொடுத்துக் கேட்கப்படும் என்ற நம்பிக்கையில் முப்பத்தாறு ஆண்டுகளுக்கு முன்னரும் பத்தாண்டுகளுக்கு முன்னரும் பாதிக்கப்பட்டவர்கள் தமக்கு நேரிட்ட இரண்டு நிகழ்வுகளைப் பகிர்ந்து கொண்டனர். 2017 அக்டோபரில் 80 பெண்கள் அமெரிக்கத் திரைப்படத் தயாரிப்பாளர் ஹார்வே வெயின்ஸ்டைனுக்கு எதிராகப் பாலியல் குற்றச்சாட்டுகளைக் கூறிய பிறகு என்ன மாறியிருக்கிறது? உலகெங்கிலும் ஆயிரக்கணக்கான பெண்கள் தங்களுக்கேற்பட்ட பாலியல் தாக்குதல் அனுபவங்களைச் சமூக ஊடகங்களில் #மீடூ என்ற தலைப்பில் வெளியிடத் தொடங்கிய பிறகு என்ன மாறியிருக்கிறது?

கட்டமைப்பு ரீதியாக எதுவுமில்லை. அமெரிக்காவிலும் இல்லை, அதைவிட நிச்சயமாக இந்தியாவிலும் இல்லை. ஆனால் சில பெண்கள் தங்களுக்கேற்பட்ட பொதுவான அனுபவங்களை வெளிப்படையாகக் கொட்டித் தீர்த்ததானது பல ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த தங்களது வாழ்க்கையை, வாழ்க்கையின் முடிவுகளை வடிவமைத்த தாக்குதல்களைப் பின்னோக்கிப் பார்க்கும் துணிவைத் தந்தது. தாங்களே முழுமையாக உணராத வகையில் தங்களது வாழ்க்கையில் பாலியல் தாக்குதல் ஊடுருவியிருப்பதைச் சில பெண்கள் உணர அது உதவியது. இந்த அனுபவங்கள் பெருமளவிற்கு ஒரே மாதிரியானதாக இருப்பது பல ஆண்டுகளாகப் பெண்கள் பெற்றுவந்த, ஆனால் இதுவரை சொல்லப்படாதிருந்த வேதனைகளுக்கு அங்கீகாரத்தைப் பெற்றுத்தந்தது.

பாலியல் தாக்குதல் குற்றமானது அதைச் செய்தவர்களுக்கு அல்லாமல் அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவமானத்தை உண்டாக்கவே பயன்படுத்தப்பட்டது. அதிகாரம், அதிலும் ஆணாதிக்க அதிகாரமே எது அறிவு என்பதை நிர்ணயிக்கும்போது பாலியல் தாக்குதலில் ‘ஆதாரம்’ என்பதை எப்படி நாம் புரிந்துகொள்வது? தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளைப் பாதிக்கப்பட்ட பெண்களே மறக்க முயன்றுகொண்டிருக்கையில் பாலியல் தாக்குதல் வழக்குகளில் ஆதாரம் என்பது என்ன? தாக்குதல் நடந்ததற்கான ஆதாரமே பாதிக்கப்பட்டவரை மிரட்டி மௌனமாக்க தாக்குதல் நடத்தியவர் பயன்படுத்தும்போது ஆதாரம் என்பது என்ன?

பலரின் மனங்களை ஆக்ரமித்திருக்கும் கேள்வி நம்பிக்கை பற்றியது. இந்தப் பெண்களை எப்படி நம்புவது? அவர்கள் உண்மையைத்தான் பேசுகிறார்கள் என்பது நமக்கு எப்படி தெரியும்? முப்பத்தாறு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த பாலியல் வன்புணர்ச்சி முயற்சிக்கு ஆதாரம் 

எங்கே?

‘நம்பிக்கை’ என்பது நீதிமுறை தர்க்கத்திற்கு அந்நியமானதல்ல. ஆனால் வேறுபாடு என்னவெனில் பெண்களின் வார்த்தையில் வைக்கப்படும் நம்பிக்கை எப்போதுமே ஆணாதிக்க அறிவின் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறது. பாலியல் தாக்குதல் என்பது அதைச் செய்பவர்களின் அதிகாரம், தண்டனையிலிருந்து அவர்கள் பெற்றுள்ள விலக்கு ஆகியவற்றின் வெளிப்பாடாக இருப்பதால் இந்த தண்டனை விலக்கானது சட்ட அமைப்புமுறை உயர்சாதி ஆண்களால் நிரப்பப்பட்டிருப்பதால் அதற்கும் நீள்கிறது. சட்டத் தீர்ப்புகள் பெண்ணின் சம்மதம் என்பதன் மதிப்பைத் தொடர்ந்து பலவீனப்படுத்திவருகின்றன; அவரது பேச்சை அவரது உடலில் இருக்கும் காயக்குறிகளுக்கு எதிராக நிறுத்துகின்றன. காயக்குறிகள் உடலில் இல்லாதபட்சத்தில் அந்தப் பெண்ணின் குணம், பாலியல் உறவுகளின் வரலாறு ஆகியவற்றின் அடிப்படையிலேயே நீதிபதிகள் முடிவுசெய்கின்றனர், அவர் பாலியல் தாக்குதலுக்கு ஆளானவர் என்பது ‘நம்பத்தகுந்ததா’ என்பது தீர்மானிக்கப்படுகிறது.

அறிவு என்பது ஆண்மையால் வரையறுக்கப்படுகிறது, ஆணாதிக்கத்தால் திணிக்கப்படுகிறது என்ற நிலை இருப்பதை எல்லோரும் அறியச்செய்ததே இந்தப் பெண்ணிய ‘அலை’யின் நீண்டகாலப் பங்களிப்பாகும். தம் அறிவு புறக்கணிக்கப்படுவது பற்றிய தங்களது அனுபவத்தை வெளிப்படுத்த பெண்களுக்கு ஒரு மொழி கிடைத்திருக்கிறது.

#மீடூ இயக்கத்தின் விளைவாக இந்தியப் பல்கலைக்கழக வட்டாரங்களில் இருக்கும் ‘பாலியல் தொந்தரவு தருபவர்களின் பட்டியல்’, முடிவில்லாது வெளிப்படும் கதறல்கள், பாதிக்கப்பட்டவர்கள் எந்த அளவிற்கு ‘சட்ட முறையீட்டு’க்கு உட்படுத்தப்படவேண்டியவர்கள் என்பது குறித்து ஒரு நிலைபாடு எடுக்கும்படி பெண்ணியவாதிகள் நிர்ப்பந்தத்திற்குள்ளானார்கள். நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையளிக்கும் இந்த சட்ட முறையீடும் ஆணாதிக்க அதிகாரம் இல்லாதது அல்ல. தனுஸ்ரீ மீது நானா படேகர் அவதூறு வழக்கு தொடுத்திருக்கையில் கிறிஸ்டைன் ஃபோர்ட் அளித்த சாட்சியத்திற்குப் பிறகும் கவனாக் நீதிபதியாகவிருக்கிறார். குற்றச்சாட்டிற்கு ஆளாகியுள்ள பிற ஆண்கள் தங்களது வாழ்க்கைக்கும் வேலைக்கும் வழக்கம்போல் திரும்பிவிட்டனர். துணிந்து பேசுவதன் பாதிப்பின் அளவை எப்படி அளவிடுவது என்று நமக்குத் தெரியவில்லை.

இப்போதைக்குப் பெண்கள் தங்களது பலத்தை மட்டுமல்ல தங்களது அறிவையும் மீட்கும் வகையில் தொடர்ந்து பேசட்டும்.

தலையங்கம், எகனாமிக் அன்ட் பொலிட்டிகல் வீக்லி, 

அக்டோபர் 6, 2018

மின்னஞ்சல்: kthiru1968@gmail.com

 

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.