தலையங்கம்
ஆசிரியர் குழு

எளிதில் தீப்பற்றக்கூடிய சில கருத்துக்கள் இருக்கின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை சாதி, மதம், மொழி ஆகியவை அந்தப் பட்டியலில் முதலிடம் பிடித்தவை. அத்தகைய பொருண்மைகளில் ஒன்றைப் போகிறபோக்கில் குறிப்பிட்ட கமல் ஹாசன் அதன்மூலம் பெரும் சர்ச்சைகளையும் இரு மக்களிடையே பதற்றங்களையும் நோக்கமின்றித் தூண்டிவிட்டார். &l

தலையங்கம்-2
ஆசிரியர் குழு

பாடகி, பின்னணிக் குரல் கலைஞர், நிகழ்ச்சித் தொகுப்பாளர் எனப் பன்முகத் திறமை கொண்டவர் சின்மயி ஸ்ரீபாதா. அவர் மே 24 அன்று நடைபெற்ற ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியின் மூலம் தமிழ்நாட்டு ரசிகர்களின் கவனத்தை மீண்டும் தன்பக்கம் ஈர்த்தார். அந்த நிகழ்வில் திரைப்படத்தில் பாடகி

கட்டுரை
சு. இராசாராம்

மொழி, மனித நாகரிகத்தின் முதலாவது கண்டுபிடிப்பு; இதன் தோற்றம் இன்று வரை புரியாத புதிர்; இது சமூகச் செயலாற்றலுக்கான கருத்துப்புலப்படுத்த ஒழுங்கமைவுடையது; அறிவாதார முறையியலின் மூல முதற்பொருள்; பன்மொழியச் சூழமைவில் ஒற்றுமையை அரண்செய்யும் ஒருங்கிணைப்பு சக்தி; மனித சமூகத்தின் இன, பண்பாட்டு அடையாளங்களு

கட்டுரை
இ. அண்ணாமலை

மொழிகளுக்கு இடையே உள்ள உறவை மனிதக் குடும்பங்களுக்கிடையே உள்ள உறவாக உருவகிப்பது ஒரு வழக்காறு. அதனாலேயே இந்த மொழிகளின் குடும்பம்  எது, ஒரு மொழியின் தாய் எது, சேய் எது என்ற கேள்விகள் எழுகின்றன. ஒரு குடும்ப உறுப்பினர்களின் பௌதீக உறவை அவர்கள் பகிர்ந்துகொண்டிருக்கும் மரபணுக்கள் காட்டுகின்றன. பெற்

கற்றனைத்தூறும் - 8
சாரா அருளரசி

பள்ளி என்பது வகுப்பறை மட்டுமன்று; கழிப்பறையும் சேர்த்ததுதான். கழிப்பறை முறையாகப் பராமரிக்கப்படவில்லை என்றால் பல்வேறு நோய்கள் வருமென்று அனைவருக்குமே தெரியும். பல அரசுப் பள்ளிகளில் கழிப்பறை வசதியில்லை அல்லது போதிய பராமரிப்பு இல்லை. சில பள்ளிகளில் கழிப்பறைகள் இருந்தாலும் அவற்றைச் சுத்தம்செய்யத் தூய்மைப

கட்டுரை
களந்தை பீர்முகம்மது

சல்மா ஆவணப் படத்திலிருந்து நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவைக்குத் தமிழ்நாட்டிலிருந்து காலியாக உள்ள ஆறு இடங்களுக்குத் திமுகவின் வேட்பாளர்களில் ஒருவராகக் கவிஞர் சல்மா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். தங்களுடைய பதவிக்காலம் முடிவடைகின்ற திமுகவின் உறுப்பினர்கள் நான்குபேரில் ஒருவர் எம்.எம். அப்

அஞ்சலி: கோகே வா தியங்கோ (1938&2025)
எஸ்.ஆர். கிருஷ்ணமூர்த்தி

நாவல், சிறுகதை, நாடகம், கட்டுரை, கவிதை - இப்படிப் பல்வேறு துறைகளில், பல பரிமாணங்களுடன் ஆப்பிரிக்க இலக்கியத்தில் நீண்ட நாள் கோலோச்சி வந்த கோகே வா தியங்கோ கடந்த மே 28ஆம் தேதி அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் புற்றுநோய் பாதிப்பினால் காலமானார். ஆப்பிரிக்க இலக்கியத்தின் மிகப்பெரிய ஆளுமையாகப் போற்றப்படு

கட்டுரை
சுரேஷ் கனகராஜா

கோகேயுடன் சுரேஷ் கனகராஜா அற்புதமான எழுத்தாளர் கோகே வா தியங்கோ காலமானது மிகவும் துயர் தருகிற செய்தி. அவர் என்னுடைய இனிய நண்பர் என்பதால் துயரம் இரட்டிப்பாகி விடுகிறது. பலர் அவரை ‘நுகூகி’ என்று அழைப்பார்கள். அவரை நான் முதன்முறை சந்தித்தபோது “உங்களை எப்படி அழைப்பது” எனக் க

கதை
கோகே வா தியங்கோ, தமிழில்: ஜி.ஏ. கௌதம்

ஓவியம்: ரவி பேலட் வள் சமையலறையில் காப்பி தயாரித்துக்கொண்டிருந்தாள். பணியாளர்கள் இருக்கும் போதுகூட, பகல் நேரத்திலும் காப்பி தயாரிப்பதில் அவளுக்கு ஒருவித அலாதிப் பிரியம். அசல் காப்பியின் மணம் அவளை ஆசுவாசப்படுத்தியது. தவிர, அந்தச் சமையலறைதான் அவளுடைய தனி உலகம். அங்கே கணவர் எட்டிப் பார்த்ததுகூட

கவிதைகள்
எம்.யுவன்

Courtesy: ‘Sethu Book Art Project’ - Naniah C (india) 2024ஆம் ஆண்டுக்கான இயல் விருது பெறும்  யுவன் சந்திரசேகருக்குக் காலச்சுவடின் வாழ்த்துகள்.     ஒளிர்கணம் எறும்புவரிசைபோல நகரும் கணங்களில் ஒன்று மட்டும் தனியாய் ஒளிர்கிறது முடுக்கியதும் உயிர்கொள்ள

நேர்காணல்: சஞ்சய் சுப்ரமணியன்
சந்திப்பு: சுகுமாரன்

சஞ்சய் சுப்ரமணியனின் விரிவான நேர்காணல் காலச்சுவடு 80ஆவது இதழில் (ஆகஸ்ட் 2006) பிரஸன்னா ராமஸ்வாமியின் முன்னெடுப்பில் வெளிவந்தது. நேர்கண்டோர் பிரஸன்ன ராமஸ்வாமி, யுவன் சந்திரசேகர், வி. ரமணி, வி.கே. ஸ்ரீராம் ஆகியோர். கர்னாடக இசை ரசிகர்கள் என்ற தேர்ந்தெடுக்கப்பட்ட தரப்பைத் தாண்டி இலக்கியவாதிகள், வாசகர்கள

ஹெப்ஸிபா ஜேசுதாசன்-100
சுப்பிரமணி இரமேஷ்

ஹெப்ஸிபா ஜேசுதாசனின் நூற்றாண்டு இது (1925-2025). ஹெப்ஸிபாவின் நூற்றாண்டை நினைவுகூரும் வகையில் தமிழ் இலக்கியத்திற்கு அவர் சில பங்களிப்புகளைச் செய்திருக்கிறார். ‘புத்தம் வீடு’ (1964), ‘டாக்டர் செல்லப்பா’(1967), ‘அனாதை’(1977), ‘மா-னீ’ (1982) என்று நான

கு. அழகிரிசாமி-&100
ச. தமிழ்ச்செல்வன்

ஓவியம்: டிராட்ஸ்கி மருது  கு. அழகிரிசாமி எழுதிய கட்டுரைகளைத் தோழர் பழ. அதியமான் தொகுத்துக் காலச்சுவடு வெளியீடாக இரு பெரும் தொகுதிகளாக வெளிவந்து கு. அழகிரிசாமிமீது நாம் கொண்டிருந்த மதிப்பைப் பல மடங்கு உயர்த்தியுள்ளது. 783 பக்கங்களில் விரிகிற இரண்டாவது தொகுப்பு பழந்தமிழ் என்றும் 879 பக்

கதை
கவிப்பித்தன்

ஓவியம்: மணிவண்ணன் பெரியாண்டவன் திருவிழா நெருங்க நெருங்க ஆண்டி குப்பனுக்கும் மல்லிகாவுக்கும் தொண்டைக்குள் சோறு இறங்கவில்லை. இன்னும் மூன்றே நாள்கள்தான். ஞாயிறு பொழுதிறங்கிவிட்டால் இந்த ஜீவன் இங்கே இருக்கப்போவதில்லை. அதை நினைத்தபடியே, மண்தொட்டியில் நிறைந்திருந்த கூழையும், அதில் ஊறிக் கொழகொழத்த க

கட்டுரை
சச்சிதானந்தன் சுகிர்தராஜா

முதலில் பாப்பரசர்கள்பற்றி நிலவும் கட்டுக்கதைகளைப் பற்றிச் சில திருத்தங்கள். இக்கதைகளில் பெரும்பாலானவை கற்பனையான புனைவுகளே. இந்தப் புனையப்பட்ட மரபுகளே பாப்பாண்டவர் பதவிக்கு ஒருவிதப் பூடகத்தன்மையையும் தவறான தகவல்களையும் ஒருசேர வழங்குகின்றன. கத்தோலிக்கத் திருச்சபை பரப்புரை செய்த தொன்மங்களில் ஒன்று:

காலச்சுடு 300&30: சக பயணிகளின் அனுபவங்கள்
நாகம்

நெய்தல் விழாவில் (2018) பெருமாள்முருகனிடமிருந்து ‘காலச்சுவடு சிறந்த ஊழியர்’ விருதுபெறும் நாகம் காலச்சுவடு இதழுடனான என்  தொடர்பு  ஓர் உள்ளூர் நாளிதழ் விளம்பரம் மூலம்தான் ஏற்பட்டது. அந்த அறிமுகமும் உறவும் கடந்த முப்பது ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் இனிமையாகத் தொடர்ந்துகொண்டி

கடிதங்கள்

நூலகத் துறை பதிப்பாளர்களை அழைத்து வெளிப்படையான நூலகக் கொள்முதலுக்கு வழி வகுத்தது வரவேற்கத்தக்கது; ‘நம்பினால் நம்புங்கள்’ என்ற கண்ணனின் கண்ணோட்டம், மாறுதலுக்கான முன்னோட்டம். 50 ஆண்டுகளாகத் தொடர்ந்து நூலகத்தைப் பயன்படுத்தும் எனக்குப் பிடித்தமான புத்தகம் கிடைப்பது அரிதான புதையல் போலத்தான

புத்தகப் பகுதி

தீரமிகு புது உலகம் (நாவல்) ஆல்டஸ் ஹக்ஸ்லி  தமிழில்: ஜி. குப்புசாமி பக். 304 ரூ. 380 கோவை புத்தகக் காட்சியை முன்னிட்டு காலச்சுவடு வெளியீடாக வரவுள்ள ‘தீரமிகு புது உலகம்’ நூலின் மொழிபெயர்ப்பாளர் உரை.   ஆல்டஸ் ஹக்ஸ்லியின் ‘தீரமிகு புது உலகம்’ (BRAVE

உள்ளடக்கம்