ஜனவரி 2023
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
செப்டம்பர் 2026
    • கட்டுரை
      வன்நினைவின் நிலம் - சேரன் கவிதைகளில் புதிய திணை
      இங்கிவரை நாம் பெறவே...
      ஈழ ஆஸ்திரேலிய நாடகம்: “எண்ணிக்கை இல்லையெல் கையோங்கு”
    • கதை
      நிலைக்கண்ணாடி
      நினைப்பு
      நீடூழி
    • திரை: விட்னெஸ்
      பார்வையாளர்கள் எனும் திறனற்ற சாட்சிகள்!
    • சுரா பக்கங்கள்
      சிவராமனுக்கு எழுதிய கடிதங்கள் - 5
    • நேர்காணல்: ஆழி செந்தில்நாதன்
      செந்தமிழிலிருந்து செய்தமிழுக்கு
    • அஞ்சலி: எஸ்.பி. சீனிவாசன் (1927 - 2022)
      வண்ணம் சூழ் தூரிகை
    • சிறப்புப் பகுதி: இன்றும் காந்தி
      இன்றும் சாதியவாதியா?
      காந்தியின் அறிவியல்
      தீண்டாமை யாத்திரையில் ஒடுக்கப்பட்டோரின் குரல்
      நுகர்வுக்கால காந்தி
      இந்தியாவுக்கு அப்பால்
      உலகத்திற்கு ஒரு கடைசி வாய்ப்பு
    • பதிவு
      சாகித்திய அகாதெமியின் மொழிபெயர்ப்பு விருதுகள்
      பாரதி விருதுகள் - 2022
    • அஞ்சலி: நாரணோ ஜெயராமன்
      பாசாங்கற்ற ஓர் இருத்தலிய ஆத்மார்த்தம்
    • புத்தகப் பகுதி
      காற்று வெளியிடை...
      யாழ்ப்பாணப பார்வை
      “கூடார்த்தச் சித்திரங்கள்”
      போர் என்பது போர்க்களத்தில் மட்டும் நடப்பதல்ல
      மரணச் செய்தி...
    • மதிப்புரை
      வரலாற்றை வாசிக்கும் விதம்
    • கவிதைகள்
      எம். யுவன் கவிதைகள்
      களம்
      சரண்மனோன் கவிதைகள்
      சக்திஜோதி கவிதைகள்
    • தலையங்கம்
      இன்றும் காந்தி
    • பதிவு: ஷார்ஜா பன்னாட்டுப் புத்தகக் காட்சி - நவம்பர் 2022
      வார்த்தைகளைப் பரப்புவோம்...
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு ஜனவரி 2023 புத்தகப் பகுதி “கூடார்த்தச் சித்திரங்கள்”

“கூடார்த்தச் சித்திரங்கள்”

புத்தகப் பகுதி

 

ஓவிய பாரதி

சுதேசமித்திரன் (1934 - 1937)

கே.ஆர். சர்மா

பாரதி பாடல்கள்

விளக்க ஓவியங்கள்

தொகுப்பும் பதிப்பும்:

ய. மணிகண்டன்

“கூடார்த்தச் சித்திரங்கள்”

 

ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள் செய்வோம்

உலகத் தொழிலனைத்தும் உவந்து செய்வோம்

என்று பாடிய பாரதி ஓவியம் வரைய அறிந்தவரா எனத் தெரியவில்லை.தாகூர், விக்டர் யூகோ முதலியவர்களெல்லாம் கவிதைக் கலையோடு ஓவியக்கலையிலும் திறன் காட்ட முனைந்ததாக வரலாறு காட்டுகின்றது. ஏன்? பாரதியின் தாசனுக்குக்கூட ஓவியத்தில் கைவண்ணம் காட்டும் ஆற்றல் சற்றே இருந்திருக்கின்றது.

ஓவியத்தை ரசிக்கத் தெரிந்தவராக மட்டுமே பாரதியைப் பற்றி நாம் அறிகின்றோம்.அவரது எழுத்துகளே ஓவியங்கள் என்று உண்மையாகவே பாராட்டலாம். அவர் கையெழுத்துக்கூட ஓவியம்போலத்தான் ஒளிர்ந்திருக்கின்றது. தனக்கு வரையத் தெரியாத ஏக்கத்தையெல்லாம் தான் நடத்திய பத்திரிகைகளில் ஓவியங்களை இடம்பெறச் செய்து தீர்த்துக்கொண்டாரோ என்று எண்ணும் அளவிற்குத் தமிழ் இதழியல் வரலாற்றில் முதன்முதலில் அவர்தான் ‘இந்தியா’ பத்திரிகையில் “கூடார்த்தச் சித்திரங்க”ளைத் (Cartoon) தொடர்ந்து இடம்பெறச் செய்திருக்கின்றார்.

ஓவியங்களையே கொண்ட ஒரு மாத இதழை நடத்தக்கூட அவர் கனவு கண்டிருக்கின்றார். ‘சித்ராவளி’ என்னும் பெயரில் அந்த இதழை நடத்த முயன்ற அவர் அதில் தமிழிலும் ஆங்கிலத்திலும் சித்திர விளக்கம் இடம்பெறும் என்றும் அறிவித்திருந்தார். இறுதிக்கட்ட வாழ்வில் – 1920இல் ‘அமிர்தம்’ என்னும் பெயரில் இருவார இதழொன்றை நடத்த முயன்றபோதும் அதில் ஓவியங்கள் இடம்பெறும் என்பதை “உலக முழுதிலும் அப்போதப்போது நடக்கும் செய்திகள் தெளிவான விளக்கங்களுடனும் சித்திரங்களுடனும் வெளியிடப்படும்” (பாரதி ஆய்வுகள் சிக்கல்களும் தீர்வுகளும், ப. 314) என்றுஅறிவிப்பில் குறிப்பிட்டிருந்தார்.

ரவிவர்மா மறைந்தபோது எழுதிய இரங்கற்பாடலில் அவரை “நன்னர் ஓவியங்கள் தீட்டி நல்கிய பெருமான்” என்று போற்றியிருந்தார் பாரதி. உரைநடையிலும் “தமது நிகரற்ற சித்திர லேகனத் திறமையால் நமது நாட்டிற்கே ஓர் பூஷணமாக விளங்கினார்” (கால வரிசையில் பாரதி பாடல்கள், ப. 137) எனச் சிறப்பித்திருந்தார். ‘ஞானரத’த்தில் ஏறி உலாவி, பர்வதகுமாரியின் கையைப் பற்றிக்கொண்டு பறந்து திரிந்து, கந்தர்வலோகத்தின் காட்சிகளில் தன்னைப் பறிகொடுத்து, சித்திரக் காட்சி ஒன்றைக் கண்டு மனம் நடுங்கியபோது, “சித்திரத்துக்கு அஞ்சுகிறாய்” என்று பர்வதகுமாரியால் நகைக்கப்பட்ட பாரதி “கந்தர்வச் சிற்பனுடைய சித்திர சலாகை எங்கே? எனது பேதை எழுதுகோ லெங்கே?” என்று தனக்குத்தானே கேட்டுக்கொண்டிருக்கிறார்.கந்தர்வநாட்டுச் சித்திரச்சாலையிலுள்ள காட்சிகளைத்தான் எப்படி எழுதிக் காட்டுவது என்று திகைத்திருக்கின்றார். சித்திரத்தில் தோன்றிய வனத்தை உண்மை வனமென்றே நம்பித் தடுமாறியிருக்கின்றார். “நமது நாட்டுச் சித்திரத்தொழிலை நாம் பாதுகாக்காமல் இருப்போமானால் இன்னும் இரண்டு, மூன்று தலைமுறைகளுக்கு அப்பால் பாரத நாட்டில் எவருக்கும் கண் தெரியாமலே போய்விடும்”(பாரதியார் கதைக் களஞ்சியம், ப. 330) என்றும் அறிவுறுத்தியிருக்கின்றார்.

     வரையத் தெரியவில்லை என்றாலும் ரசிக்கத் தெரிந்த பாரதி சித்திரங்களின், சித்திரக்கலையின் மேன்மையைக் கொண்டாடியிருக்கின்றார். புதுவை வாழ்க்கை முடிவுபெற்றுக் கடயம், எட்டயபுரம், பாபநாசம், குற்றாலம் என்றெல்லாம் தம் கடைசி நாள்களைக் கடத்திக்கொண்டிருந்த காலத்தில் தென்காசியிலே நண்பர் மடத்துக்கடை சிதம்பரம் பிள்ளை வீட்டில் சில நாள்கள் தங்கியிருந்தார். நண்பரின் தம்பி டி.எஸ்.சொக்கலிங்கத்திடம் தனக்கு ஒரு லட்ச ரூபாய் தேவை என்று சொல்லியிருக்கின்றார். எதற்கு அவ்வளவு தொகை என்று சொக்கலிங்கம் கேட்க, ஐம்பதாயிரம் ரூபாய் தனது கவிதைகளை அச்சிடும் செலவுக்கு என்று தெரிவித்திருக்கின்றார். மீதம் தொகை எதற்கு எனப் பாரதி தெரிவித்த விடை தனது கவிதைகள் சித்திரங்களோடு வெளிவர வேண்டும் என்பதில் அவருக்கிருந்த தீராத விருப்பத்தைத் தெரிவிப்பதாக அமைந்தது.

(முன்னுரையிலிருந்து)

 

 

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினார். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ் வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 300வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும் சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும் பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.