ஜனவரி 2023
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
செப்டம்பர் 2026
    • கட்டுரை
      வன்நினைவின் நிலம் - சேரன் கவிதைகளில் புதிய திணை
      இங்கிவரை நாம் பெறவே...
      ஈழ ஆஸ்திரேலிய நாடகம்: “எண்ணிக்கை இல்லையெல் கையோங்கு”
    • கதை
      நிலைக்கண்ணாடி
      நினைப்பு
      நீடூழி
    • திரை: விட்னெஸ்
      பார்வையாளர்கள் எனும் திறனற்ற சாட்சிகள்!
    • சுரா பக்கங்கள்
      சிவராமனுக்கு எழுதிய கடிதங்கள் - 5
    • நேர்காணல்: ஆழி செந்தில்நாதன்
      செந்தமிழிலிருந்து செய்தமிழுக்கு
    • அஞ்சலி: எஸ்.பி. சீனிவாசன் (1927 - 2022)
      வண்ணம் சூழ் தூரிகை
    • சிறப்புப் பகுதி: இன்றும் காந்தி
      இன்றும் சாதியவாதியா?
      காந்தியின் அறிவியல்
      தீண்டாமை யாத்திரையில் ஒடுக்கப்பட்டோரின் குரல்
      நுகர்வுக்கால காந்தி
      இந்தியாவுக்கு அப்பால்
      உலகத்திற்கு ஒரு கடைசி வாய்ப்பு
    • பதிவு
      சாகித்திய அகாதெமியின் மொழிபெயர்ப்பு விருதுகள்
      பாரதி விருதுகள் - 2022
    • அஞ்சலி: நாரணோ ஜெயராமன்
      பாசாங்கற்ற ஓர் இருத்தலிய ஆத்மார்த்தம்
    • புத்தகப் பகுதி
      காற்று வெளியிடை...
      யாழ்ப்பாணப பார்வை
      “கூடார்த்தச் சித்திரங்கள்”
      போர் என்பது போர்க்களத்தில் மட்டும் நடப்பதல்ல
      மரணச் செய்தி...
    • மதிப்புரை
      வரலாற்றை வாசிக்கும் விதம்
    • கவிதைகள்
      எம். யுவன் கவிதைகள்
      களம்
      சரண்மனோன் கவிதைகள்
      சக்திஜோதி கவிதைகள்
    • தலையங்கம்
      இன்றும் காந்தி
    • பதிவு: ஷார்ஜா பன்னாட்டுப் புத்தகக் காட்சி - நவம்பர் 2022
      வார்த்தைகளைப் பரப்புவோம்...
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு ஜனவரி 2023 கவிதைகள் எம். யுவன் கவிதைகள்

எம். யுவன் கவிதைகள்

கவிதைகள்
எம். யுவன்

அசந்தர்ப்பம்

 

கிழவனின் காமம்போல

அல்லது

பேரிளம்பெண்ணின் மழலைபோல

 

பகலில் கவிந்த இருள்போல 

அல்லது

நள்ளிரவின் கூர்மைபோல

 

பேதையின் பேருரைபோல

அல்லது

காதலியின் மௌனம்போல

 

மரணவீட்டில் நகைப்பொலிபோல

அல்லது

பகற்கனவில் கலவிபோல

 

வந்து தீர்கிறது இக்கணம்.

 

உறங்கும் உடல்மீது ஊரும் கனவென

    அல்லது

சவத்தில் சொட்டிய கண்ணீர்த் துளியென

 

தானாகப் புரள்கிறது - ஒரு மிடறு

திகைப்பின் துளியை 

அருந்தித் திகைக்கிறேன். கனம் 

தாளாது நசுங்குகிறேன். ஆனாலும்

 

ஒவ்வொரு முறையும்

தடுமாறி

காலூன்றி 

நிமிர்ந்துவிடுகிறேன்.

-------------------------

 

இதுவும்தான், அதுவும்தான்

 

மரத் தண்டிலிருந்து பட்டையை

உரிப்பதென

இடத்திலிருந்து வேளையைப் 

பிரித்தேன். அப்போது

எங்கே இருந்தேன்

    இப்போதிலா, இங்கேயா?

 

இன்னொரு சமயம்

காம்பிலிருந்து இலந்தையைப்

பறிப்பதென

விண்மீன் ஒன்றைப்

பறித்தெடுத்தேன்.

உள்ளங்கையில் திகழ்ந்தது

குளுமையா வெம்மையா?

 

பின்னொரு நாள்

குழிப்பந்து ஆட்டத்தில் 

கோள் ஒன்றைச் சேந்தியெடுத்துத்

தவழவிட்டேன். உருண்டுருண்டுருண்டு

அது போய்ச் சேர்ந்தது

அண்டத்தினுள்ளா வெளியேவா?

 

பழைய கட்டடத்தைப் புதுப்பிப்பதென 

இறந்த காலத்தின் அலகொன்றைப்

புத்துயிர்க்க முனைந்தேன். உடனடியாய்

அது என் வசிப்பிடமானது 

     நிஜமா பிரமையா?

 

கண்ணீர் பெருகித் திகைத்த பொழுதில்

தயிரிலிருந்து வெண்ணெய் கடைவதென

முறிந்த உறவிலிருந்து அன்பைத்

    திரட்டக் கிளம்பினேன். 

ஊமத்தங்காய் வடிவில்

திரண்ட முள்பந்து உள்ளங்கையில்

அழுத்தி ரத்தமெனக் கசிந்தது

    வேதனையா நிம்மதியா?

 

எதுவானால் என்ன, 

சட்டையைக் கழற்றும் 

பாம்பின் ரணம் தீர

இன்னொன்று உதித்து

போர்த்தி மூடுகிறது.

உரித்த சட்டை பளபளக்கிறது

உரிந்த உடம்பும்தான்…

 

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினார். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ் வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 300வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும் சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும் பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.