ஆகஸ்ட்
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
ஆகஸ்ட்
    • கட்டுரை
      அவசரநிலையும் எனது தலைமறைவு வாழ்க்கையும்
      அது ஓர் இருண்ட காலம்
      கருத்துரிமைக்குக் கறுப்பு நாட்கள்
    • கதை
      தீராக் கனல்
      நினைவுச் சிலை
      மாயச் சுண்ண வரைகோல்
    • சிறப்புப் பகுதி
      நெருக்கடி நிலை 50ஆம் ஆண்டு
    • நேர்காணல்: பக்தவத்சல பாரதி
      மனிதநேயத்திற்கான அறிவுத்துறையே மானிடவியல்
    • பதிவு
      வாழும் காலத்திலேயே உணரப்பட்ட மேதமை
    • தொடர் 80+
      ஆய்வுலகில் ஆ.சி.யின் பங்களிப்பு: அதிகாரமற்ற மனிதர்களின் அடையாள மீட்பு
    • திரை
      கடந்த காலத்தின் அட்டூழியம் நிகழ்காலத்தின் பிரதிபலிப்பு
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • மதிப்புரை
      பகடிமொழியில் உக்கிரமான இலக்கிய ஆய்வு
      உணவு: நீதியும் மரபும்
    • முன்னுரை
      இதுவரை அறியாத முகம்
    • கவிதைகள்
      கடைசியாக
    • தலையங்கம்
      தலையங்கம்
    • கற்றனைத்தூறும்-9
      தூய்மைக் கலை
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு ஆகஸ்ட் மதிப்புரை பகடிமொழியில் உக்கிரமான இலக்கிய ஆய்வு

பகடிமொழியில் உக்கிரமான இலக்கிய ஆய்வு

மதிப்புரை
கா. விக்னேஷ்

கள் மணக்கும் பக்கங்கள்
தமிழ்ச் சிந்தனை மரபில் வெளியும் காலமும்
க. காசிமாரியப்பன்

வெளியீடு: 
காலச்சுவடு பதிப்பகம்
669, கே.பி. ரோடு, 
நாகர்கோவில் - 629 001
பக். 207
ரூ. 260

இலக்கியத் திறனாய்வு அணுகு முறைகளில் ஒன்றான ‘வெளி’ பற்றிய சிந்தனை தொல்காப்பியத்தில் தொடங்கி தமிழ் அறிவு மரபில் இருந்தாலும் அதை முறைப்படுத்தி வளர்த்த ஆய்வுகள் சொற்பம். ஐந்திணைகளில் வெளிப்படும் நிலங்களை / வெளிகளை இலக்கியங்களில் தேடுவதிலே பெரும்பான்மை காலம் கழிந்தது. கட்புலனாகா வெளி என்ற ஒன்றும் உள்ளது. அது அதிகாரக் கருத்தியல் வடிவம் கொண்டது. அது சாதி, பால், வர்க்கம், மதம், அரசுருவாக்கம், சீறூர், பேரூரென நுட்பமான அலகுகளில் இயங்கும் தன்மைகொண்டது. க. காசிமாரியப்பனின் ‘கள் மணக்கும் பக்கங்கள் தமிழ்ச் சிந்தனை மரபில் வெளியும் காலமும்’ எனும் நூல் சங்க இலக்கியம், நவீன நாவல்களில் தொழிற்படும் வெளி குறித்த கருத்தாக்கங்களைப் பிரதி இயங்குதளத்திலிருந்து வெளிக்கொண்டு வந்துள்ளது; பத்துக் கட்டுரைகளைக் கொண்ட இந்த நூலின் அணுகுமுறையான ‘வெளி’ குறித்த அறிமுகம் முதலில் இடம்பெற்றுள்ளது.

ஆற்றல்மிகு பெண்தெய்வ வெளியாக இருந்த பழந்தமிழர் வெளி அழிந்து, ஆண்வெளி எழுச்சி பட்டினப்பாலையில் நிகழ்கிறது என்பதை இரண்டாம் கட்டுரை ஆராய்கிறது. பழங்குடிவெளி அழிந்து பட்டினவெளி உருவாக்கம் பெறுகிறது. பன்மைத்துவம் அழிக்கப்பட்டு வேந்துவெளி நிறுவப்படுகிறது. பட்டினப்பாலையின் முற்பகுதி திணைத்தன்மை வாய்ந்த வெளி. அங்கு மைந்தரை மகளிர் புணர்கிறார்கள். பிற்பகுதியில் மகளிரை மைந்தன் புணரும் நிலை உருவாவதாகப் பனுவலின் உள்ளடக்கக் கூறுகளைக் கொண்டு முடிவுகள் அளிக்கப்படுகின்றன. பழங்குடித் (வேல்) தன்மை அழிந்து வேந்துருவாக்கம் (கோல்) எழுகிறது என்று விளக்குபவர், இக்கட்டுரையில் புதுமையான வாசிப்பை முன்வைக்கிறார். கொடிநிலை, கந்தழி, வள்ளி ஆகிய வழிபாட்டு மரபுகள் பெண் தன்மை நிறைந்தவை. இவை தாந்திரீக வழிபாட்டுச் சடங்குகளே என்பதுதான் அது. பட்டினப்பாலையில் இடம்பெறும் சடங்குசார் நிகழ்வுகள் மீன், கள், பெண், புணர்ச்சியோடு தொடர்புடையன. இவை தாந்திரீகத்தின் பாற்பட்டவை. எனவே இது ‘உலகாயத’ இலக்கியமாகும்.

மட்டுமின்றி, ‘கொண்டி மகளிர்’ என்பாரை அடிமை மகளிரல்லர்; அவர் ‘ஆற்றல்மிக்கோர்’ எனக் குறிப்பிடுகிறார். ஊருண் நீர்த்துறையில் அடிமைகளுக்கு இடமிருக்காது. ஆனால் கொண்டி மகளிர் அதில் குளிக்கிறார்கள் என்பதையும் கொண்டி எனும் சொல்லின் பொருள் ‘கட்டற்றது’ என்பதையும் வாதமாக முன்வைக்கிறார். இதுவொரு மாற்றுப்பார்வை; என்றாலும் இன்னும் தரவுகள் வேண்டும். கொண்டி என்றால் கொள்ளை; கொள்ளையிட்டு வந்த மகளிர் எனப் பொருள்கொள்வர் ஆய்வாளர். மணிமேகலை உள்ளிட்ட பிற இலக்கியங்களில் அவர்களின் செயற்களங்கள் என்னவென்பதைக் குறித்தும் விரிவாக விளக்கும்போது இது வலிமைபெறும்.

திணைவெளி அழிவைச் சொல்லும் பனுவல் மதுரைக்காஞ்சி. சிறுமரபு, தாய்த்தெய்வ வழிபாடு ஆகியவற்றின் அழிவும் பெருந்தெய்வ உருவாக்கமும் இப்பனுவலில் நிகழ்ந்துள்ளன. “இனக்குழு மக்கள், சீறூர்த் தலைவர், குறுநில மன்னர் நலிவுற்றுப் பெருவேந்தர் நிலத்தை ஆண்ட கதையை மதுரைக்காஞ்சி கூறுகிறது”(ப.83). இக்கருத்துக்குரியதாக உள்ளடக்கத் தரவுகள் அமைகின்றன. இது நிலையாமையை வலியுறுத்தினாலும் போர் சிறப்பிக்கப்பட்டும் வேந்தன் புகழ் உயர்த்தப்பட்டும் ஏனையவற்றை மட்டுப்படுத்தும் முயற்சி இதில் நிகழ்ந்துள்ளது. பெண்வெளி அழிக்கப்பட்டு ‘மனையுறை மகளிர்’ ஆக்கப்பட்ட நிலையைப் ‘பெண்டிர் இல்லாப் பெருநகர வீதிகள்’ என்று அடையாளப்படுத்துகிறார். வளமான நில அழிவை வாசக மனங்கள் ஏற்றுக்கொள்ளும் பொருட்டு மன்னன் இறைநிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளான் என்கிறார். ‘தமிழில் மன்னன் எனும் நிலைக்கு இறையும் சமஸ்கிருதத்தில் இறை என்ற நிலைக்கு மன்னனும் உயர்ந்ததாக’ ஜார்ஜ் எல். ஹார்ட் குறிப்பிடுவார்.

பதிற்றுப்பத்துப் பனுவலில் குடியழிக்கப்பட்டு வெளி விரிவாக்கம் நிகழ்ந்த சமூக மாற்றத்தை ஒரு கட்டுரை ஆராய்கிறது. அகம் x புறம், வளமை x வறள், மண் x விண் ஆகிய இருமை எதிர்வுகளே இப்பிரதி இயக்கத்திற்கு அடிப்படையாகின்றன என்கிறார். இவற்றுள் முந்தையவை ஒடுக்கப்பட்டுப் பிந்தையவை எழுவதன்வழி அதிகாரக் கருத்துருவாக்கம் வலுப்பெறுகிறது. பாரியின் இனக்குழுவெளி அழிப்பும் சேரனின் பெருவெளி உருவாக்கமுமே இப்பிரதியின் மையமாகின்றன. பூமாலை x பொன் மாலையாதல் எனும் நிகழ்வு இயற்கை அழிவும் செயற்கை எழுச்சியும் உண்டாவதைக் காட்டுகிறது என்று குறிப்பிடுபவர், செயற்கையான போரை மறுக்கிறார். இனக்குழுப் பூசல் வாழ்வியல் சார்ந்தது என்றும் பெருவேந்தர் போர் அதிகாரத்தின்பாற்பட்டது, செயற்கையானது என்றும் கருதுகிறார். போராட்டத்தை நகையாட்டத்தின்வழிப் புறந்தள்ளுகிறார். வேந்துருவாக்கமும் வைதிக எழுச்சியும் திணையழிப்பின் வழியே நிகழ்கின்றன. ‘திணைக்கோட்பாட்டைக் காப்பது நிலங்காத்தலாகும்’ எனும் இவரின் பார்வை முக்கியமானது. இதன்வழிப் பழங்குடி மனத்தை விரும்பும் ஆய்வாளராகவும் வெளிப்படுகிறார்.

மேற்கண்ட கட்டுரைகளின் மையப்பொருண்மையாக நூலாசிரியர் முன்வைக்கும் கருத்து மறுபரிசீலனைக்குரியது. பெண்ணும் மண்ணும் வளமையின்பாற்பட்டவர்கள் எனும் மானிடவியலாளர் கருத்தை ஏற்றுக்கொள்கிறார் காசிமாரியப்பன். இக்கருத்தை நுட்பமாக அணுக வேண்டும். பெண் (உடல்) = மண் (பொருள்) எனும் சமன்மை சிக்கலுக்குரியது. வளமை, சடங்கு ஆகிய கருத்துகளின் பின்னிருந்து விளக்குதல் அதிகாரத் தொடர்புடையது. பெண்ணுடல் மீட்பே நிலத்தின் மீட்பு எனும் சூழலியற் பெண்ணியப் (Eco-Feminism) பின்புலத்திலிருந்து ஒலிக்கும் குரலுக்கும் வளமை சடங்குசார் குரலுக்கும் வேறுபாடுள்ளது. பெண், மண் இரண்டும் பொருட்கள்; அவற்றின் உரிமை ஆணுக்கே எனும் அதிகாரக் கருத்தியலுக்கும் இது வழிவகுக்கும். இவற்றிலிருந்து மீளும் சூழல்-பெண்ணியத் தன்மையிலே நூலாசிரியரின் வாதம் அமைவந்திருந்தாலும் தெளிவில்லாமை வெளிப்படுகிறது. மறு-உற்பத்தி எனும் சிந்தனையில் பெண்ணையும் மண்ணையும் இணைப்பதை நவீனப் பெண்ணியம் ஏற்பதில்லை. ‘வெளியும் காலமும்’ என்று தலைப்பிலமைந்தாலும் காலம் குறித்த ஓர்மையில்லை. வரலாற்றுக் காலத்தோடும் பிரதியியக்கக் காலத்தோடும் இணைத்து நுட்பமான திறப்புகளை முன்வைக்க வேண்டும்.               

“போகத்திற் பற்றற்று வேற்றுப்புலத்துக்குச் செல்லுதல், பாலைத்திணையின் கூறாகும். போகங்களைத் துறந்து சிதம்பரம் அலைகிறான். பாலைக்கவிதை மரபின் தொடர்ச்சியென நகர்கிறது நாவல்”(ப.113) என்று பூமணியின் வெக்கை நாவலைத் திணைவாசிப்புக்கு உட்படுத்தும் காசிமாரியப்பன், ‘நிலத்தைப் பறித்தலும் அதைமீட்டலுமே நாவலின் கருதுபொருள்’ எனும் உரிப்பொருள் வரையறையை அளிக்கிறார். ‘நைவேத்யம்’ நாவலில் மாசடையாப் பிராமண வெளியைப் பூமணி காட்டுகிறார். பிராமணர் நிலத்தைக் குடியானவர் உழுதாலும் அக்கிரகாரத்திற்குள் அவர்களால் நுழைய முடியவில்லை; கதைசொல்லி நுழைக்க விரும்பவும் இல்லை. இந்நாவல்கள் அரசுசார் பொதுவெளியை ஏற்கவில்லை. உள்ளூர்ப் பஞ்சாயத்துகளையே விரும்புகின்றன என்றும் நகரமயம் குறித்த பெரும் ஒவ்வாமை பூமணியிடம் வெளிப்படுவதாகவும் குறிப்பிடுகிறார்.

பிறகு, பழையன கழிதல், கருக்கு, சங்கதி, கோவேறு கழுதைகள் ஆகிய தலித் நாவல்களை ஆராயும் கட்டுரை, ‘தலித்துகள் தாங்கள் வாழும்வெளியை மட்டுமே பாதுகாப்பான உலகமாகக் கருதுகிறார்கள். புறவெளி தலித் பெண்களுக்குப் பாதுகாப்பை அளிப்பதில்லை. தலித் நாவல்களில் கிராம வெளிகளே கதைக்களமாகின்றன. நகரவெளியில் இவர்களுக்கு ஒவ்வாமை உள்ளது’ என்று குறிப்பிடுகிறது. நகரவெளியில் சாதியத்தின் வீரியம் ஒப்பீட்டளவில் குறைகிறது என்கிறார். ‘தங்களுக்குச் சொந்தம் இல்லாத நிலத்தின்மீது புனைவியற்பாங்கான உறவைப் பெற்றுள்ளவர்களாக இவர்களின் பாத்திரங்கள் உள்ளன’ என்கிறார். நிலமானிய உறவுகள் சமூகக் கடுத்தத்திற்கே வழிவகுக்கும் என்றும் தனிவெளி வாழ்வு வைதீக மனுநீதியின்பாற்பட்டது என்றும் இது விடுதலைக்கு வழிவகுக்காது என்றும் குறிப்பிடுகிறார். இவையே தலித் நாவல்களின் பிரச்சினைப்பாடுகள் என்று கருதுகிறார்.

சோலை சுந்தரப்பெருமாளின் மரக்கால், செந்நெல், எல்லைப்பிடாரி ஆகிய நாவல்களில் சமயவெளி குறித்த நினைவேக்கம் இருக்கிறது. ‘மரக்கால்’ நாவலில், நந்தன் எனும் பாத்திரம் வைதீக உடலாகப் படைக்கப் பட்டுள்ளது என்கிறார். தானாக நெருப்பில் விழுந்து இறக்கும் நந்தன், தில்லைத் தீட்சிதர்களைக் காப்பாற்றிவிடுகிறான். அவனுக்குப் ‘பறை’ உடல் உவப்பாக இல்லை என்ற விமர்சனத்தை முன்வைக்கிறார். அதோடு கோவில்நுழைவு, ஆரூர்த் தெருக்களின் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் ‘வெளி’ செயல்படுகிறது போன்ற முடிவுகள் அளிக்கப்பட்டுள்ளன. நாவலுக்கு நாவல் சோலையின் மொழி மாற்றமடைகிறது. அது வட்டாரத் தன்மையில் செறிவாகவும் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இடப்பெயர்வின் போதெல்லாம் பெரிய முடிவுகளை அம்மணி எடுக்கிறாள் என்று தி.ஜா.வின் ‘மரப்பசு’ நாவல் வாசிப்புக்கு உட்படுகிறது. மனுநீதிக்கு எதிரான குரலும் சுயசாதி விமர்சனமும் தி.ஜா.விடம் ஒலிக்கிறது. விடுதலைப்பெண்ணாக அம்மணி பாத்திரம் அமைந்தாலும் இறுதியில் ஆணைத் தேடிச் சரணடையும் வழக்கமான பெண்ணாக மாறிப்போகிறாள் என்கிறார். கம்யூனிஸ எதிர்ப்பைக் காட்டமாக வெளிப்படுத்தினாலும் கட்டற்ற பாலியல் உறவுகளை முன்னிலைப்படுத்தும் இந்நாவல் ‘மாற்று மரபின் தொடக்கம்’ என்று அடையாளப்படுத்துகிறார்.

பெருமாள்முருகனின் கூளமாதாரி, ஏறுவெயில், நிழல்முற்றம் ஆகிய நாவல்கள் ஒரு கட்டுரையிலும் கங்கணம் நாவல் ஒரு கட்டுரையிலும் ஆராயப்பட்டுள்ளன. கூளமாதாரியை முல்லைத்திணை நாவல் என்கிறார். இந்நாவல் திணைத்தன்மை கொண்ட சாதிய வெளியையும் ‘ஏறுவெயில்’ சாதிய வெளி உடைவையும் ‘நிழல்முற்றம்’ சாதித்தன்மை குறைந்த சாதியப் பொதுவெளியையும் கதையாக்கியுள்ளமை ஆய்வு முடிவாக முன்வைக்கப்படுகிறது. கூளமாதாரி சாதிய மரபை உடைக்காது நடப்பை அனுசரித்துப்போகும் பண்பை வெளிப்படுத்துகிறது. கூளமாதாரியில் சிறுவர்களாய் இருந்த கூளையன், செல்வன் ஆகியோர் இளைஞர்களான கதையே கங்கணம் என்கிறார். தாய், தாய்மைமீதான புனித பிம்பங்களில் பெருமாள்முருகனின் புனைவுகள் கல்லெறிகின்றன. சுயசாதி விமர்சனம், சன்னமான கவுண்டர் இனவரைவியல் உள்ளிட்டவை பெருமாள்முருகன் படைப்புகளில் தென்படுகின்றன. நகரவெளிமீதான வெறுப்பு பூமணி, சோ. தர்மன், இமையம் போன்றோரிடம் இருப்பதைப்போலவே பெருமாள்முருகனிடமும் உள்ளதெனக் குறிப்பிட்டு நகர வெளியில் ஒதுங்குகிறார் காசிமாரியப்பன்.

திணையியல் சிந்தனையை வழக்கமான அட்டவணையால் நிரப்பாது அதைக் கருத்தியல் வடிவ அணுகுமுறையாக முன்வைக்கும் நூலாசிரியரின் சிந்தனை காலத்தின் தேவை. இப்பார்வையை மேலும் விரித்துப் பல்வேறு ஆய்வுகள் வர வேண்டும். சங்க இலக்கியங்களையும் சமகால நாவல்களையும் ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொண்ட அவரின் வழிகாட்டி ‘வெளி’ எனும் கருத்தாக்கமே. ஒட்டுமொத்தமாகக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் இருமை எதிர்வு (Binary Opposition) ஊடாட்டங்களே ஆய்வை நகர்த்திச்செல்கின்றன. அகப்புற எதிர்வில் அகப்பக்கம், சீறூர் x பேரூர் எதிர்வில் சீறூர்ப்பக்கம், ஆண் x பெண் எதிர்வில் பெண் பக்கம், பிராமண x சிரமண எதிர்வில் சிரமணப்பக்கம் என்று தன் அரசியல் பக்கத்தை ஆய்வின்வழி தர்க்கபூர்வமாக முன்வைக்கிறார். நுட்பமான பார்வைகளை முன்வைக்கும் இந்த ஆய்வின் இடையிடையே வந்துபோகும் காசி மாரியப்பனின் பகடிமொழி, அதிகாரக் கருத்துருவ பிம்பங்களை உடைத்தெறிகின்றன. பெருங்கடவுளர், பெருவேந்தர், பொதுப்புத்தி, மந்தைக் கலாச்சாரம் ஆகியவற்றைப் பகடியால் புறந்தள்ளும் இந்நூல், செறிவான ‘சொல் மணக்கும் பக்கங்’களாக விரிகிறது.

 மின்னஞ்சல்: vaishnavicky07@gmail.com

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.