அக்டோபர் 2018
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
டிசம்பர் 2025
    • உரை
      அப்புண்ணியின் கதை
    • கதை
      ஆறு லட்சம் ஜிகா பைட்டுகள்
      3 நுண்கதைகள்
    • அஞ்சலி
      குல்தீப் நய்யார் (1923-2018) : முடிவிலிருந்து ஆரம்பம்
      கொண்டபல்லி கோடேஸ்வரம்மா (1918-2018) - கொள்கைக்காக வாழ்ந்தவர்
    • EPW பக்கங்கள்
      கும்பல் வன்முறைக்கு ஆதரவானது பஞ்சாபின் மதநிந்தனை மசோதா
      ‘பாதுகாவலர்’களே வேட்டைக்காரர்களாக மாறும்போது...
    • பதிவு
      நாவல் கதை கவிதை சினிமா
    • நேர்காணல்
      புதிய பாடத்திட்ட உருவாக்கத்திற்கு ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகமே ஒத்துழைப்புக் கொடுத்தது - த.உதயச்சந்திரன்
    • திரை
      மேற்குத் தொடர்ச்சி மலை
    • சுரா நினைவு
      போர்ஹெஸ் - சுந்தர ராமசாமியின் டயரிக்குறிப்புகளில்
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • மதிப்புரை
      வாசித்திராத கதைவெளி
    • கல்விச் சிறப்பிதழ்
      கற்பனையல்ல கதையல்ல!
      பாத்திரம் புதிது, பானம்?
      பள்ளிக் கட்டமைப்பும் சனநாயகமும்
      இற்று வீழும் வளையங்கள்
      மதிப்பீடு: காலமும் களமும்
      படிக்காத பிள்ளை
      ஒட்டகத்துக்குக் கோணல் ஓரிடத்திலா?
      பள்ளியில் பாலியல் கல்வி
    • கவிதைகள்
      ஏன் கொண்டாடுகிறீர்கள்?
      பாதசாரி
    • தலையங்கம்
      “ஆமேன்”
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு அக்டோபர் 2018 தலையங்கம் “ஆமேன்”

“ஆமேன்”

தலையங்கம்

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் லத்தீன் கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் ஃபிராங்கோ முல்லைக்கல் பாலியல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியக் கத்தோலிக்கத் திருச்சபையைச் சேர்ந்த ஆயர் ஒருவர் குற்ற வழக்கில் தண்டிக்கப்படுவது இதுவே முதன்முறை. குடிமைச் சட்டமும் மதநூல்களும் ‘குற்றத்துக்குத் தண்டனை நிச்சயம்’ என்றே வலியுறுத்துகின்றன. சமூகநெறியைக் காப்பாற்றுவதற்காக ஒருவர் தண்டிக்கப்படுவது இயல்பு. ஆனால் ஃபிராங்கோவின் கைதும் அதையொட்டி மத அமைப்புகளும் அரசும் மேற்கொண்ட நடவடிக்கைகளும் கண்டனத்துக்கு உரியவை. அரசியல், மதம், பணபலம் ஆகியவை சமூகத்தில் பெற்றிருக்கும் நியாயமற்ற அதிகாரத்தை எடுத்துக்காட்டுபவை.

கடந்த ஜூன் மாதம் கோட்டயத்திலுள்ள கன்னியர் மடத்தில் வசிக்கும் கன்னியாஸ்திரீ, ஆயர் பிராங்கோவுக்கு எதிராகப் பாலியல் புகார் ஒன்றைக் காவல்துறையிடம் கொடுத்தார். 2014 முதல் 2016 வரையான காலஅளவில் கோட்டயத்துக்கு வந்து சென்ற ஆயர் தன்னைப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாகக் குற்றம்சாட்டியிருந்தார். அவரைத் தொடர்ந்து வேறு மூன்று பெண் துறவியரும் தாங்களும் ஃபிராங்கோவால் பாலியல் வன்முறைக்கு ஆளானதாகக் காவல்துறையிடம் புகார் அளித்தனர். இதையொட்டி நிகழ்ந்த சம்பவங்கள் மத அமைப்பு எந்த அளவுக்கு அதிகாரமும் செல்வாக்கும் கொண்டது என்பதை வெளிப்படுத்தியது. மதத்தின் பெயரால் சட்டம் ஒழுங்கு விதிகளும் பொது நாகரிகமும் காற்றில் பறக்கவிடப்பட்டன.

கத்தோலிக்கத் திருச்சபையின் தலைமைப் பீடமான வாடிகனுக்கு பாதிக்கப்பட்ட பெண் துறவியர் கோரிக்கை விடுத்தனர். ஆனால் போப் பிரான்சிஸ் அந்தக் கோரிக்கையைச் செவிமடுக்க மறுத்தார். குற்றம் சாட்டப்பட்ட ஃபிராங்கோவுக்கு ஆதரவாகவே வாடிகன் முடிவெடுத்தது. ஒரே மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தபோதும் பெண்கள் இரண்டாம் தரத்தவர்களாகவே காணப்படுவதன் அடையாளம் இது. குற்றம் சாட்டியவர்களிடம் விசாரிக்காமல் அவர்கள்மீது சபைக் கட்டுப்பாட்டை மீறியதாக எதிர்க் குற்றச்சாட்டை முன்வைத்தது வாடிகன்.

கேரளத்திலுள்ள ‘விசுவாசிகள்’ ஒட்டுமொத்தமாக கன்னியாஸ்திரீகளையே குற்றவாளிகளாக்கினர். விசுவாசிகளின் பிரதிநிதியாக அவதாரம் எடுத்த பூஞ்ஞாறு சட்டமன்ற உறுப்பினர்  பி.சி. ஜார்ஜின் பேச்சுக்கள் பெண்பாலரை இழிவுபடுத்தியது. ஆயர் மீது புகார் அளித்த கன்னியாஸ்திரீகளின் கன்னித்தன்மையைப் பரிசோதிக்க வேண்டும் என்று பேசியது ஆபாசம் மட்டுமல்ல; அத்துமீறல். ஆனால் அவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதன் உச்சம் குற்றம் சாட்டப்பட்ட ஆயர் ஃபிராங்கோவின் அராஜகக் கூற்று. குற்றம்சாட்டிய கன்னியாஸ்திரீயுடன் தான் கொண்டது ‘வன்கலவி அல்ல; ஆன்மீகச் சங்கமம்’ என்று கூறியது பெண்களையும் மதநம்பிக்கையையும் ஒருசேர அவமதித்தது. இத்தனை நடந்தும் வாடிகன் அவர்மீது நடவடிக்கை எடுக்கத் தயங்கியது. மதத்தில் ஆணாதிக்கப் போக்கின் அப்பழுக்கற்ற அடையாளம் அது.
மடாலயத்தை விட்டு வெளியேறிய கன்னியாஸ்திரீகள் தெருவில் இறங்கி உரிமைக்காகவும் மானத்துக்காகவும் போராடினர். அவர்கள் நம்பியிருந்த மதஅமைப்பும் அவர்களைப் பாதுகாக்க வேண்டிய அரசும் ஒருங்கே கைவிட்டன. எனினும் தொடர் போராட்டத்தின் விளைவாக ஃபிராங்கோ முல்லைக்கல் ஆயர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். இது வெறும் கண்துடைப்பு. குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்படவேண்டும் என்ற கோரிக்கையில் பிடிவாதமாக நின்றனர் பெண் துறவியர். ‘தவறு செய்தவர்கள் எவராயினும் முகம்பாராமல் அரசு நடவடிக்கை எடுக்கும்’ என்று கூறிய இடது முன்னணி அரசும் நடவடிக்கை எடுப்பதில் உறுதிகாட்டவில்லை. அது மதஅமைப்புக்கு அரசின்மீது எந்த அளவுக்குச் செல்வாக்கு உள்ளது என்பதன் சான்று. ‘புனித வஸ்திரங்கள் அணிந்து தெருவிலிறங்கிப் போராடிய கன்னியாஸ்திரீகள் செய்வது சபைக்கு விரோதமான செயல்; அவர்கள் சபையிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும்’ என்று மிஷனரீஸ் ஆஃப் ஜீஸஸ் அமைப்பு அறிக்கை வெளியிட்டது.
எண்பத்தேழு நாட்கள் தொடர்ந்து நடந்த கன்னியாஸ்திரீகளின் போராட்ட முடிவில் ஃபிராங்கோ முல்லைக்கல் கைது செய்யப்பட்டார். அவர்மீது விசாரணை தொடங்கியிருக்கிறது. இந்தச் சம்பவம் இதுவரை வெளிச்சத்துக்கு வராத பல உண்மைகளை வெளியே கொண்டுவந்திருக்கிறது.

துறவியர் மடாலயங்களில் பெண்கள் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்படுவதைப் பகிரங்கப்படுத்தியிருக்கிறது இந்த விசாரணை. இதற்கு முன்பும் பெண் துறவியர் பலர் இதுபோன்ற அவலத்தை எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். அதற்காக அவர்கள் கொல்லப்பட்டுமிருக்கிறார்கள். சகோதரி அபயா ஓர் உதாரணம்: பலர் மடத்தைவிட்டே வெளியேறியிருக்கிறார்கள். உதாரணம் சகோதரி ஜெஸ்மி. இந்த வெளிப்படுத்தல்கள் உண்மை என்பதை ஃபிராங்கோ சம்பவம் உறுதி செய்கிறது.

துறவியரில் எல்லாரும் சமம் அல்ல என்பதையும் சம்பவம் காட்டுகிறது. பெண்கள் இரண்டாந்தரத்தினராகவே நடத்தப்படுகிறார்கள். ஆணாதிக்கக் கருத்துகளுக்கும் அதிகாரமுமே சபைக்குள் கோலோச்சுகின்றன என்பதை உலகுக்குச் சொல்கிறது. ஆண் துறவியருக்கு வழங்கப்படும் ஊதியம் அவர்களது குடும்பத்தை வளமாக்க உதவும்போது, பெண்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மடத்துக்கே திருப்பி அளிக்கப்பட வேண்டும் என்ற கட்டாய நிலையைத் திறந்து காட்டியிருக்கிறது. துறவியர் சமூகத்தில் மதர் சுப்பீரியர்களும் ஆட்சிமன்ற உறுப்பினர்களும் இருந்தாலும் அதிகாரத்தை வைத்திருப்பவர்கள் ஆயர்களே, ஆண்களே என்ற ரகசியத்தை விசாரணை உடைத்திருக்கிறது.

மதத் தலைவராக இருந்தாலும் அவர் இந்தியக் குடிமகன். இந்தியச் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டவர். ஆனால் அவற்றைத் துச்சமாகத் தள்ளும் அளவுக்கு அதிகாரம் பெற்றிருப்பது எப்படி என்ற கேள்வியை இந்தச் சம்பவம் எழுப்புகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு குற்றம் சாட்டப்பட்டவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளத் தயங்கும் அளவுக்கு மதம் முற்றான அதிகாரப் பீடமாகியிருப்பது எப்படி என்ற வினாவை எழுப்புகிறது. அரசியலும் மதமும் அதிகாரப் பங்கீட்டில் கைகோத்துக் கொள்கின்றனவா என்ற வலுவான ஐயத்தை ஏற்படுத்துகிறது. ‘ஆம்’ என்றால் அது ஆபத்தானது என்பதை முன்னறிவிக்கிறது. சட்டத்தின் முன்னும் மதத்தின் முன்னும் அனைவரும் சமம் என்பது மகத்தான பொய் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.

‘சந்தைப் பொருளாதாரத்தின் செல்வாக்கும் நுகர்வுக் கலாச்சாரத்தின் செல்வாக்கும் திருச்சபைகளிலும் நிலவுகிறது. ஆன்மாவுக்கு ஆனந்தமளிப்பதல்ல; சரீரத்துக்குச் சுகமளிப்பதே தேவை என்ற மனப்போக்கு சபைகளிலும் பரவியிருக்கிறது. முதலாளியத்தின் மதிப்பீகளும் மதிப்பின்மைகளும் திருச்சபைகளையும் பாதிரியார் சமூகத்தையும் அடிபணியச் செய்திருப்பதன் உதாரணம், இந்தச் சம்பவம். புதிய முதலாளியச் சக்திகளும் மதவேற்றுமைகளும் வலுவடைந்துகொண்டிருக்கும் காலத்தில் எளிய மனிதர்களுக்குப் புகலிடமாகத் திகழவேண்டிய சபைகள், அவற்றின் பகுதியாக மாறிப் போனதையே இது காட்டுகிறது’ என்று யாக்கோபா திருச்சபைத் தலைவர் கூறுகிறார்.
திருச்சபை, இயேசுவின் புனித உடலாக உவமிக்கப்படுகிறது. உயிர்த்தெழுந்த இயேசுவின் திருவுடல். அது மீண்டும் ஒருமுறை கழுமரத்தில் ஏற்றப்பட்டிருக்கிறது. அது எப்படி உயிர்த்தெழும் என்பதே பக்க சார்பற்ற இறைநம்பிக்கையாளர்களும் நல்லிணக்கத்தை விரும்புபவர்களும் கேட்கும் கேள்வி.

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினார். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ் வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 300வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும் சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும் பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.