முடிந்துபோன அத்தியாயத்தை அசைபோடுதல்

இந்த உலகில் பயனற்றதென எதுவும் இல்லை. ஒவ்வொன்றுக்கும் ஏதோ ஒரு கடமையும் அதற்கே உரிய பொறுப்புகளும் உள்ளன. மாபெரும் உயிரினங்கள் மட்டுமே மகத்தானவையல்ல. சின்னஞ்சிறிய உயிரினங்களுக்கும் அவற்றுக்கே உரிய ஒரு பொறுப்பு இருக்கிறது. கண்ணுக்குப் புலப்படாத நுண்ணுயிர்கள் இல்லையெனில் மாபெரும் உயிரினங்களின் செரிமானப் பணிகள் நின்றுவிடும். தேனீக்களும் அவற்றைவிடச் சிறிய பூச்சிகளும் பூத்துக் குலுங்கும் செடிகளிடையில் புகுந்து திரிந்து மகரந்தச் சேர்க்கைக்கு வழிவகுக்கின்றன. சிறியவை என நாம் அவற்றைக் கருதிப் புறக்கணித்தாலோ, அழித்தாலோ நமக்கு உண்பதற்குக்கூட எதுவும் கிட்டாத நிலை ஏற்படலாம். சிறியவையா, பெரியவையா என்பது வாழ்வில் ஒரு பிரச்சினையே இல்லை. அவற்றின் பங்களிப்பை நாம் அற்பமானதாகக் கருதத் தேவையில்லை.
ஊடகவெளியில் சிறுபத்திரிகைகளுடைய பங்களிப்புக்குத் தனிப்பட்ட விதத்தில் முக்கியமான பங்கு இருக்கிறது. பெரிய பத்திரிகைக
