தலையங்கம்
ஆசிரியர் குழு

2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், தமிழக அரசியல் வரலாற்றில், முக்கால் நூற்றாண்டுக் கால இருதுருவ அரசியலின் அடியாழத்தில் நிகழ்ந்திருக்கும் அதிர்வு. திமுக, அதிமுக ஆகிய இருபெரும் நிறுவனமயப்பட்ட சக்திகளைக் கடந்து, தேர்தல் அரசியலில் நுழைந்த மூன்றே ஆண்டுகளில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைக் கைப்பற்றி ஆட

கட்டுரை
க. திருநாவுக்கரசு

“சினிமாதான் இங்கிலாந்தின் சிந்தையாய் இருக்கப்போகிறது. தேசத்தின் மனசாட்சியை, தேசத்தின் இலட்சியங்களை, எது சரி, எது தவறு என்பதைத் தீர்மானிக்கும் நடத்தை விதிகளை இனி சினிமாவே தீர்மானிக்கும்,” என்று 1914இல் சினிமா குறித்து எழுதிய கட்டுரை ஒன்றில் பெர்னாட் ஷா கூறியது இங்கிலாந்தில் உண்மையாகவில்லை

கட்டுரை
ஸ்டாலின் ராஜாங்கம்

இந்துத்துவம், இந்துத்துவா என்று தமிழ்நாட்டு அரசியல் களத்தில் கையாளப்பட்டு வந்த சொற்களை இப்போதெல்லாம் கேட்க முடிவதில்லை. கிட்டத்தட்ட அச்சொற்கள் காணாமல் போயிருக்கின்றன. கடந்த 15 ஆண்டு காலத் தமிழ்நாட்டு அரசியல் சொல்லாடல்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நடந்துள்ளன. இந்தச் சொற்கள் இல்லாமல் போயிருப்பதும்

கடிதங்கள்

தமிழின் சிறந்த அரசியல் நாவல்களில் ஒன்றான ‘பயணம்’ நாவலை எழுதிய அரவிந்தன் மறைவை ஒட்டிக் காலச்சுவடில் வெளியான ‘அரவிந்தன் நினைவுகள்’ பகுதியில் எழுவர் அரவிந்தனின் எழுத்தாளுமை குறித்தும் அவரின் தனிப்பட்ட பண்புகள் குறித்தும் சிறப்பான முறையில் நினைவு கூர்ந்துள்ளார்கள். அவர் இதழிய

கட்டுரை
மு. இராமனாதன்

பிரிட்டிஷாரிடமிருந்து விடுதலை பெற்ற இந்தியா அயல்நாடுகளுடன் கொண்டிருந்த உறவை ‘அணி சேராக் கொள்கை’ வழிநடத்தியது. இது காலனியத்திற்கு எதிரானது. எந்த வல்லரசின் பக்கமும் சாராமல் நிற்பது. தாராளமயத்தின் காலத்தில் இந்தியாவின் கொள்கை மாறியது. அது சுயேச்சையான அயலுறவுக் கொள்கை (strategic autonomy) என

பத்தி இன்றும் என்றும் - 2
ராமச்சந்திர குஹா

6ஆகஸ்ட் 2019.  அன்றுபெங்களூரு ஐஐடியில் காபி அருந்திக்கொண்டி ருந்தேன். முந்தைய தினம்தான் காஷ்மீருக்கான இந்திய அரசிய லமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டிருந்தது. கூடியிருந்தவர்களில் இளையவரான கணினி ஆய்வாளர், “இப்போது நாம் பார்த்துக்கொண்டிருப்பது மோடி 2.0 அல்ல, ஷா 1.0”

கட்டுரை
சு. இராசாராம்

மொழி, தகவல்தொடர்பின் முதன்மை ஊடகம். பொது மொழியைக் காட்டிலும் ஊடக மொழியின் செயற்பாட்டு நோக்கம் வலுவானது. இது படைப்பாளியின் எண்ணங்கள், கருத்துக்கள், சிந்தனைகள், மனவுணர்வுகள் முதலானவற்றை வாசகர்க்குக் கடத்திச் சமூகத்தைக் கட்டமைக்கும் சக்தி வாய்ந்தது. தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏற்படும் மாற்றங்களை உட்க

பதிவு
ஜி. ஐசக் அருள்தாஸ்

நாகர்கோவிலில் இயங்கும் ‘அனக்கம்’ சமூக, பண்பாட்டு இலக்கிய அமைப்பின் 110ஆவது மாதாந்திரக் கூடுகை  எழுத்தாளரும் இதழாளரும் காலச்சுவடு பதிப்பகத்தின் பதிப்பாசிரியராகப் பணியாற்றிய டி.ஐ. அரவிந்தனின் நினைவுக் கூடுகையாக அமைந்தது. ‘அனக்கம்’ அமைப்பாளர் ஜே.ஆர்.வி. எட்வர்ட் அறிமுக

பதிவு
தி.அ. ஸ்ரீனிவாஸன்

படம்: ஜவஹர். ஜி   ‘நெய்தல்’ அமைப்பின் சார்பாக  ஏப்ரல் 26 அன்று நாகர்கோவில் ரோட்டரி கம்யூனிட்டி ஹாலில் ‘அரவிந்தன் அஞ்சலிக் கூட்டம்’ நடந்தது. கூட்டத்தில் பின்னணியாக ஒலித்துக்கொண்டிருந்த டி.எம்.கிருஷ்ணாவின் இசை கூட்டத்தின் உணர்ச்சிக்கு ஆழம் சேர்ப்பதாக அமைந்தி

கவிதைகள்
கவிதா முரளிதரன்

ஓவியம்: ஜெபா     ஒரு டீக்கும் எனக்குமான சந்திப்பு நிகழ்வதற்கு பிரத்யேகமான காரணங்களென  எதுவும் தேவையில்லை. அது டீயாயிருக்கிறது. நான் நானாயிருக்கிறேன்  ஆனாலும் சில வேளை ஒரு உரையாடலுக்கு முந்தைய தயக்கத்தை  உடைப்பதற்கு  ஒரு கிளாஸ் டீ தேவையாயிருக்கிறது.

நேர்காணல்: இரா. முரளி
நேர்கண்டவர்: தொ. பத்தினாதன்

படங்கள்: கண்மணி தமிழ்ச் சிந்தனைச் சூழலில் எஸ்.வி. ராஜதுரை, ந. முத்துமோகன் முதலானவர்கள் தத்துவம், சிந்தனைக் கோட்பாடு போன்றவற்றில் தீவிரமாக இயங்கி வருபவர்கள். அந்த வரிசையில் இன்று ஊக்கத்துடன் இயங்கி வருபவர் இரா. முரளி. நவீனத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் உலகளாவிய இளந்தலைமுறையினரிடம் தத்துவத்தை

கற்றனைத்தூறும்-17
சாரா அருளரசி

கடந்த பல ஆண்டுகளாக, தமிழக அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி சதவிகிதம் அதிகரித்து வருவதைக் கவனித்திருக்கலாம். சென்ற கல்வியாண்டில் நடைபெற்ற 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் 94.56% மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதே ஆண்டின் கேரள மாநிலத் தேர்ச்சி சதவிகிதம் 77.81%. கடந்த ஐந்தாண்டுகளின் தேர்ச்சி

கட்டுரை
க. துளசிதாசன்

Courtesy: Huffpost இந்தியா முழுக்க நீட் தேர்வு தொடங்கப்பட்டு ஒன்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. நீட் தேர்வு கொண்டுவரப்பட்ட காலத்தில், மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் நீட் தேர்வு குறித்த, விழிப்புணர்வையும் அச்சத்தையும் அரசாங்கம் உட்படப் பல்வேறு கல்வி நிறுவனங்கள், மாணவர் அமைப்புகள், அரசியல்

கதைகள்
ஹோஸே எடுவார்டோ ஆகுவலூஸா; தமிழில்: யுவன் சந்திரசேகர்

ஓவியம்: நரசிம்ம பாலாஜி ஜார்ஜ் லூயி போர்ஹெஸ் தன்னால் பார்க்க முடிவதை அறிந்தபோது, தாம் இறந்துவிட்டதைக் கண்டுபிடித்தார். ஜெனீவா வின்மீது வளர்ந்து கொண்டிருந்த இரவின் தொலைதூர முணுமுணுப்பை நன்றாகக் கேட்பதற்காகக் கண்களை மூடியிருந்தார் அப்போது. முதலில் ஒரு சிவப்பு ஒளியைக் கண்டார். கூர்மையான ஒளி. தன்ன

அஞ்சலி: ரகு ராய் (1938 & 2026)
வைட் ஆங்கிள் ரவிஷங்கரன்

பட உதவி: அவினாஷ் ‘ரகு ராய்’ இந்தியாவின் புகைப்பட இதழியலுக்கு உலக அளவில் நன்மதிப்பைப் பெற்றுத் தந்தவர். புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த ஏப்ரல் 26ஆம் தேதியன்று இயற்கை எய்தினார். ரகு ராய் எவ்வாறு புகைப்பட இதழியலில் ஒரு தனித்துவத்தை உண்டாக்கினாரென்றும், தனது புகைப்படக் கலையில்

அஞ்சலி: துரை. சீனிச்சாமி (1944 -2026)
கோ. சந்தனமாரியம்மாள்

பட உதவி: மு. இளங்கோவன் பேராசிரியர் துரை. சீனிச்சாமி என்ற அந்த உயர்ந்த மனிதர் மறைந்தார் என்பதை ஏற்க முடியவில்லை. என்னுடைய ஆய்வு நெறியாளர் மட்டுமல்ல, வாழ்க்கையை யதார்த்தமாய் நகர்த்தக் கற்றுக்கொடுத்தவர். புளியங்குடிக்கு அருகில் உள்ள சிந்தாமணியில், 1944ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் நாள் துரைராஜ், அன்னம்மா

அஞ்சலி: இ. சுந்தரமூர்த்தி (1942 - 2026)
பெருமாள்முருகன்

‘இ.சு. ஐயா’ என்று நாங்கள் அழைக்கும் பேராசிரியர் இ. சுந்தரமூர்த்தி அவர்கள் (5.02.1942-13.05.2026) தொடக்கப்பள்ளி ஆசிரியராகப் பணியைத் தொடங்கித் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வரைக்கும் பதவி வகித்த பெருமைக்குரியவர். சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்மொழித் துறையில் பேராசிரியராகப் பல ஆண்டுகள் பண

முன்னுரை
கண்ணன்

மொழிபெயர்ப்பு பற்றிய முதல் விழிப்புணர்வு, அதன் ஆழமும் முக்கியத்துவமும் அவசியமான உழைப்பும், ஒரு கணத்தில்  மின்னல் வெளிச்சம் போலத்தான் என் மனதில் பதிந்தன. அப்போது எனக்கு 18 வயதிருக்கும். எனவே அதன் பின்னர் எப்போதுமே அதை இரண்டாம் நிலைச் செயல்பாடாக எண்ணியதே இல்லை. பத்துப் பதினோரு வயதிலிருந்தே தமி

கட்டுரை
செ.இரா. செல்வகுமரன்

Courtesy: David Levene / The Guardian இயற்கை உலகே ஆகச்சிறந்த ஈர்ப்பூட்டும் ஒன்றாகவும்,  அழகுக்கு ஆகப்பெரிய ஊற்றுக்கண்ணாகவும், அறிவார்வம்  ஊட்டுவதாகவும் உள்ளது. வாழ்க்கையைப் பொருளுடைய  வாழ்வாக்கும்  ஆகப்பெரிய உயிர்ப்பு அடிப்படை.  -  ‘சர்’ டேவிட

உள்ளடக்கம்