அரசியல் ஜூகல்பந்தி: ஏழு அரசியல் கூட்டாளிகள்
6ஆகஸ்ட் 2019. அன்றுபெங்களூரு ஐஐடியில் காபி அருந்திக்கொண்டி ருந்தேன். முந்தைய தினம்தான் காஷ்மீருக்கான இந்திய அரசிய லமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டிருந்தது. கூடியிருந்தவர்களில் இளையவரான கணினி ஆய்வாளர், “இப்போது நாம் பார்த்துக்கொண்டிருப்பது மோடி 2.0 அல்ல, ஷா 1.0” என்றார். காரணம், இந்தியாவின் ஒரே இஸ்லாமியப் பெரும்பான்மை மாநிலத்தைச் சட்டென்று கீழே இறக்கிவிட்டவர் உள்துறை அமைச்சர் ஷா. அரசாங்கத்தின் பலமிக்க இரண்டாவது மனிதர். பிரதமரைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால்தான், சுதந்திரமாக, உண்மையான அதிகாரத்தோடு செயல்படும் ஒரே அமைச்சர். இருந்தும், காஷ்மீர் நிகழ்வை ஷா 1.0 என்று பெயரிட்டு அழைக்க முடியுமா என்று தெரியவில்லை. ஏனெனில், ‘மோடி-ஷா ஜுகல்பந்தி’ என்பது இந்தியாவில் நாம் காணும் முதல் கூட்டணியல்ல. இவர்களுக்கு முன்பே சில முன்னோடிகள் இருந்திருக்கிறார்கள்.
சுதந்திரத்துக்குப் பிறகான அரசில் நேருவும் படேலும் கூட்டாளிகளாக இருந்தனர். அன்றைய நச்சுத்தன்மை கொண்ட அரசியல் சூழல் அவர்களை எதிரிகளாகவும் போட்டியாளர்களாகவும் கண்டது என்றாலும் உ
