மொழிபெயர்ப்புக் கலையின் நுட்பங்கள்
மொழிபெயர்ப்பு பற்றிய முதல் விழிப்புணர்வு, அதன் ஆழமும் முக்கியத்துவமும் அவசியமான உழைப்பும், ஒரு கணத்தில் மின்னல் வெளிச்சம் போலத்தான் என் மனதில் பதிந்தன. அப்போது எனக்கு 18 வயதிருக்கும். எனவே அதன் பின்னர் எப்போதுமே அதை இரண்டாம் நிலைச் செயல்பாடாக எண்ணியதே இல்லை.
பத்துப் பதினோரு வயதிலிருந்தே தமிழிலும் ஆங்கிலத்திலும் படிக்கத் தொடங்கிவிட்டேன். முதல் மொழிபெயர்ப்புகளை, ரஷ்ய வெளியீடுகள், பேர்ல் பதிப்பக வெளியீடுகள் போன்றவற்றை மொழிபெயர்ப்பு என்ற தனிக் கவனமின்றியே படித்திருக்கிறேன்.
இடதுசாரி நூல்களைப் படித்துக்கொண்டே ஆர்தர் கோஸ்ட்லர் (Arthur Koestler)இன் ‘டார்க்னெஸ் அட் நூன்’ (Darkness at Noon), கம்யூனிசக் கட்சியில் இணைந்து, ஊக்கமுடன் பணியாற்றி, பின்னர் நம்பிக்கை இழந்து வெளியேறிய நட்சத்திர எழுத்தாளர்களின் தொகுப்பான ‘தி கோட் தட் பெய்ல்ட்’ (The God that Failed) நூல்களைப் படித்தேன். சோவியத் யூனியன் பற்றிய மயக்கமெல்லாம் அத்தோடு தீர்ந்தது. இரண்டாவது நூலில் பங்களித்திருந்த கவிஞர் ஸ்டீபன் ஸ்பெண்டர் நடத்திய இதழான என்கவுண்டரில் அந்த வழக்கு விசாரணைப
