நரகத்தில் போர்ஹெஸ்

ஓவியம்: நரசிம்ம பாலாஜி
ஜார்ஜ் லூயி போர்ஹெஸ் தன்னால் பார்க்க முடிவதை அறிந்தபோது, தாம் இறந்துவிட்டதைக் கண்டுபிடித்தார். ஜெனீவா வின்மீது வளர்ந்து கொண்டிருந்த இரவின் தொலைதூர முணுமுணுப்பை நன்றாகக் கேட்பதற்காகக் கண்களை மூடியிருந்தார் அப்போது. முதலில் ஒரு சிவப்பு ஒளியைக் கண்டார். கூர்மையான ஒளி. தன்னுடைய இமைகளின் வழியே ஊடுருவி வரும் சூரிய வெளிச்சமே அது என்று புரிந்துகொண்டார். பிறகு, கண்களைத் திறந்தார். முகத்தை ஒருபுறமாய்த் திருப்பினார். அடர்த்தியான பச்சைநிற நிழல்களின் வரிசையைக் கண்டார். ஒரு வாழைத் தோட்டத்தில் மல்லாத்திக் கிடத்தப்பட்டிருந்தார். இது அவரது மனநிலையை மோசமாக்கியது. வாழை மரங்களா! சொர்க்கம் என்பது ஒருவகை நூலகமாய் இருக்கும் என்றே எப்போதும் கற்பனை செய்துவந்திருந்தார். தாழ்வாரங்கள், படிக்கட்டுகள், இன்னும் தாழ்வாரங்கள், இன்னுமின்னும் படிக்கட்டுக
