ஜூன் 2026
SIGN IN
SIGN UP
இதழாகப் படிக்க
SUBSCRIBE
ஜூன் 2026
    • கட்டுரை
      விஜய் எனும் புலப்பாடு
      மறைந்த மதச்சார்பின்மை: தமிழ்நாட்டு அரசியல் சொல்லாடல்களின் மாற்றங்கள்
      ஈரான் போர் எங்கே நிற்கிறது இந்தியா?
      ஊடக மொழியாளுமையர்
      நீட் என்னும் வன்கொடுமை
      புவியின் சாட்சி
    • அஞ்சலி: ரகு ராய் (1938 & 2026)
      காலத்தைப் படம்பிடித்தவர்
    • பத்தி இன்றும் என்றும் - 2
      அரசியல் ஜூகல்பந்தி: ஏழு அரசியல் கூட்டாளிகள்
    • நேர்காணல்: இரா. முரளி
      “தமிழர் மெய்யியல் பன்முகமானது”
    • அஞ்சலி: இ. சுந்தரமூர்த்தி (1942 - 2026)
      நடமாடும் ‘கூகுள்’
    • கற்றனைத்தூறும்-17
      எலிப்பந்தயமோ கல்வி?
    • பதிவு
      அரவிந்தன்:காலச்சுவடுக்குப் பேரிழப்பு
      தன்யனானவர்
    • அஞ்சலி: துரை. சீனிச்சாமி (1944 -2026)
      என் குருநாதர்
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • கதைகள்
      நரகத்தில் போர்ஹெஸ்
    • முன்னுரை
      மொழிபெயர்ப்புக் கலையின் நுட்பங்கள்
    • கவிதைகள்
      கவிதா முரளிதரன் கவிதைகள்
    • தலையங்கம்
      ‘தற்குறி’களின் வருகை அல்லது இருதுருவ அரசியலின் வீழ்ச்சி
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு ஜூன் 2026 பதிவு அரவிந்தன்:காலச்சுவடுக்குப் பேரிழப்பு

அரவிந்தன்:காலச்சுவடுக்குப் பேரிழப்பு

பதிவு
ஜி. ஐசக் அருள்தாஸ்

நாகர்கோவிலில் இயங்கும் ‘அனக்கம்’ சமூக, பண்பாட்டு இலக்கிய அமைப்பின் 110ஆவது மாதாந்திரக் கூடுகை  எழுத்தாளரும் இதழாளரும் காலச்சுவடு பதிப்பகத்தின் பதிப்பாசிரியராகப் பணியாற்றிய டி.ஐ. அரவிந்தனின் நினைவுக் கூடுகையாக அமைந்தது. ‘அனக்கம்’ அமைப்பாளர் ஜே.ஆர்.வி. எட்வர்ட் அறிமுக உரை  ஆற்றினார். இலக்கியம் படைத்தல், மொழிபெயர்ப்புப் பணிகளில் தீவிரமாக இயங்கிவந்த காலத்தில் அவர் வாழ்க்கைப் பயணத்தில் விழுந்த திடீர் முற்றுப்புள்ளி துயரமானது எனக் குறிப்பிட்ட எட்வர்ட், அரவிந்தனின் இலக்கியப் பயணத்தில் சு.ரா.வின் முக்கியப் பங்கையும் தொட்டுக்காட்டினார்.

அரவிந்தனோடு தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் இருந்த நெருக்கத்தை நினைவுகூர்ந்த எழுத்தாளர் களந்தை பீர்முகம்மது, இலக்கியத்தையும் மீறித் தங்களுக்குள் ஊடாடிய பிணைப்பை நெகிழ்ச்சியுடன் விவரித்தார். “நாகர்கோவிலில் அவர் தங்கியிருந்த வீட்டிற்குச் செல்லும்போதெல்லாம் காபி அருந்தாமல் என்னை அனுப்பவே மாட்டார். அவரது கைப்பக்குவத்தில் உருவாகும் காபி சுவைமிக்கது. அவரது தீர்க்கமான அறிவும் சோர்விலா உழைப்பும் என்னை வியக்கவைக்கும். காலத்தை வீணாக்காமல் கச்சிதமாகப் பயன்படுத்துபவர். இரவு வேளைகளில் சமூக ஊடகங்களில் சிறிது நேரம் கவனம் செலுத்தினால், ‘களந்தை, ஏன் நேரத்தை வீணாக்குறீர்கள்? அந்த நேரத்தை எழுதுவதற்குப் பயன்படுத்துங்கள்’ என ஆலோசனை வழங்குவார். அவரது ஆலோசனையை ஏற்றுச் செயல்பட்டதால்தான் மீண்டும் கதைகள் எழுதினேன். கதைகளைப் படித்துவிட்டுச் சில திருத்தங்களையும் முன்வைப்பார்” என்றவர் அரவிந்தனின் இருப்பிடம் தொடர்பானதொரு துயரச் செய்தியைப் பகிர்ந்தார். “சென்னையில் வாடகை வீட்டில் வாழ்ந்த அரவிந்தன் 11 வீடுகள் மாறியுள்ளார். சென்னை, பள்ளிக்கரணையில் புது வீடு வாங்கி, குடும்பமாகக் குடியேறி, ஒருநாள் தங்கிவிட்டு நாகர்கோவில் வந்தவர், இங்கேயே உயிர் துறந்துவிட்டார்”.

எழுத்தாளர் பெருமாள்முருகன், அரவிந்தனின் படைப்பாளுமையை மையப்படுத்திப் பேசினார். தனக்கும் அரவிந்தனுக்கும் இடையேயான 30 ஆண்டுக்கால நட்பையும் தொடர்பையும் நினைவுகூர்ந்தார். “அரவிந்தன் கல்வி நிறுவனங்களில் பணியாற்றியதில்லை; ஊடக நிறுவனங்களில்தான் பணியாற்றியிருக்கிறார். நான் எனது மாணவர்களில் பலரை அவரிடம் அனுப்பிப் பயிற்சி பெறச் செய்திருக்கிறேன்; அப்படிப் பயிற்சி பெற்றோர் பலருக்கு அந்நிறுவனங்களில் பணியாற்றும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது. ஈகோ இல்லாத மனிதர்” என்றவர், இதழியல்,  இலக்கியத் துறைகளில் அவரது பங்களிப்பை விளக்கினார். அரவிந்தனின் சிறுகதைகள், நாவல்களைத் தொட்டுக்காட்டிப் பேசிய பெருமாள்முருகன் அவரது சென்னை வட்டாரத் தமிழ் சார்ந்த ஆய்வையும் ‘ஒரு சொல் கேளீர்’ என்ற நூலின் சிறப்பையும் விதந்தோதினார். அரவிந்தனின் மொழிபெயர்ப்புத் திறனையும் விவரித்து, அவர் மொழிபெயர்த்த நூல்களைப் பட்டியலிட்டார்.

அடுத்து உரையாற்றிய காலச்சுவடு ஆசிரியர், பதிப்பாளரான கண்ணன், அரவிந்தனுக்கும் காலச்சுவடுக்கும் இடையேயான பிணைப்பை விவரித்தார். இளம்பருவத்திலேயே அரவிந்தன் கொண்டிருந்த திறமையையும் முன்னணிப் படைப்பாளர்களுடன் அவருக்கிருந்த உறவையும் எடுத்துச் சொன்னார். மாலனின் ஆசிரியத்துவத்தில் வெளிவந்துகொண்டிருந்த இந்தியா டுடே தமிழ் இதழிலும் இந்து தமிழ் திசை நாளிதழிலும் மின்னம்பலம் இணைய இதழிலும் அவர் பணியாற்றிய காலத்தையும், அரவிந்தன் சொந்தமாக சென்னை நம்ம சென்னை என்று இதழ் நடத்திய அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டார். சிறப்பாக, காலச்சுவடு நிறுவனத்தில் அரவிந்தனின் மகத்தான பங்களிப்பை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார். காலச்சுவடு இதழுக்காக அரவிந்தன் எழுதிய சில தலையங்கங்கள், பதிப்பக வெளியீடுகளுக்காக அவர் தேர்வுசெய்யும் நூல்கள், மெய்ப்புப் பார்ப்பதில் அவரது நேர்த்தி, கடின உழைப்பு முதலானவற்றைப் பட்டியலிட்ட கண்ணன், அரவிந்தனின் திடீர் மறைவு காலச்சுவடுக்குப் பேரிழப்பு என்றார்.

‘அனக்கம்’ அமைப்பின் பொருளாளர் ஜி. ஐசக் அருள்தாஸ் சிறப்பு உரையாளர்களின் கருத்துக்களைத் தொகுத்து வழங்கி, அனைவருக்கும் நன்றி கூறினார்.

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினார். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ் வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 300வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும் சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும் பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.