கவிதா முரளிதரன் கவிதைகள்

ஓவியம்: ஜெபா
ஒரு டீக்கும் எனக்குமான சந்திப்பு
நிகழ்வதற்கு
பிரத்யேகமான காரணங்களென
எதுவும் தேவையில்லை.
அது டீயாயிருக்கிறது.
நான் நானாயிருக்கிறேன்
ஆனாலும் சில வேளை
ஒரு உரையாடலுக்கு முந்தைய தயக்கத்தை
உடைப்பதற்கு
ஒரு கிளாஸ் டீ தேவையாயிருக்கிறது.
ஒரு அவமானத்தை
விழுங்கிச் செரிப்பதற்கு,
சில கண்ணீர்த் துளிகளை
வைராக்கியமாய் மாற்றுவதற்கு,
ஒரு புன்னகையை
பத்திரப்படுத்துவதற்கு,
இல்லாத மிடுக்கை
அணிந்து கொள்வதற்கு,
எல்லாவற்றுக்கும் கொஞ்சம்
அவகாசமாக
ஒரு கிளாஸ் டீ இருக்கிறது.
யாரையாவது மன்னிக்கவும்
எதையாவது கடக்கவும்
