எலிப்பந்தயமோ கல்வி?

கடந்த பல ஆண்டுகளாக, தமிழக அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி சதவிகிதம் அதிகரித்து வருவதைக் கவனித்திருக்கலாம். சென்ற கல்வியாண்டில் நடைபெற்ற 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் 94.56% மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதே ஆண்டின் கேரள மாநிலத் தேர்ச்சி சதவிகிதம் 77.81%. கடந்த ஐந்தாண்டுகளின் தேர்ச்சி சதவிகிதப் பட்டியலைக் கவனித்தோமானால், இதுவிஷயத்தில் மேலும் வெளிச்சம் கிடைக்கும்; அது, நாம் குறைந்த ஒளியை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறோம் என்பதே! தமிழகத்தின் தேர்ச்சி சதவிகிதம் அதிகரித்திருப்பது குறித்துப் பெருமைப்பட ஏதுமில்லை.
சில ஆண்டுகளாகவே, மாணவர் தேர்ச்சி சதவிகிதம் குறித்த விழிப்புணர்வு அரசுக்கு வந்துவிட்டது. ஆசிரியர் சமூகத்தைக் கசக்கிப் பிழிந்து, சிறப்பு வகுப்புகள் வைத்தேனும் சதவிகிதத்தைக் கூட்ட வேண்டுமென்னும் வாய்மொழி உத்தரவு நடைமுறையில் உள்ளது. இதைக் கண்காணிக்க அரசின் அனைத்துத் துற
