துணை
கதை
துணை
எம். கோபாலகிருஷ்ணன்
ஓவியம்: ஞானப்பிரகாசம் ஸ்தபதி
வண்டியிலிருந்து கீழே போட்ட புல்லுக்கட்டைத் தூக்கிக்கொண்டு தொழுவத்துக்குப் போகும்போதுதான் கையில் சிறிய பாத்திரத்துடன் அவள் வந்து கண்ணுசாமியின் எதிரில் நின்றாள். சேலைத் தலைப்பை இழுத்துத் தலையில் முக்காடிட்டிருந்தவளின் கழுத்தில் சிவப்புக் கயிறும் மங்கிய சங்கிலியொன்றும். கைவளையல்கள் பொலிவிழந்திருந்தன. முப்பது வயதுக்கான உடல்வாகு. சிவந்த முகம். உதட்டில் வெற்றிலைச் சிவப்பு.
“கொழந்தைக்கு பால் கொஞ்சம் வேணும். கெடைக்குமா அய்யா?” எடுப்பான குரல் தயக்கத்துடன் ஒலித்தது.
<p