அப வாதம் அல்லது காற்றில் அசையும் தொங்கட்டான்கள்
ஓவியம்: மு. நடேஷ்
அப வாதம் அல்லது காற்றில் அசையும் தொங்கட்டான்கள்
ஒரு சொல்லைப் பிடித்து
தொங்குதல்.
ஒரு சொல் பிடித்துப்போய்
தொங்குதல்.
ஒரு சொல்லை சொல்லச்சொல்லி
தொங்குதல்.
சொல்லி விட்ட ஒரு சொல்லுக்காக
தொங்குதல்.
வெள்ளைச் செம்பருத்தி
துளியூண்டு காலி நிலத்தில்
நட்டு வைத்த செடி
முதல் பூவை வெளிப்படுத்திய தினத்தில்
மனம் சுகந்தத்தால் நிரம்பியது
இரண்டு
மூன்று
நான்காய்
ஆனந்தத்தின் அலை
தொடர்வதற்குள்
வீட்டைக் காலி செய்ய நேர்ந்தது
அதன்
நிறத்தில்
மணத்தில்