குள்ளு
ஓவியங்கள்: செல்வம்
திருமணத்திற்கு ஒரே ஒரு நிபந்தனைதான் விதித்தாள் நிலவி. எங்கே என்றாலும் சரி, தன் ‘குள்ளு’ம் தன்னோடு வருவான். முப்பதைக் கடக்கும் குமராசு எந்த நிபந்தனைக்கும் இணங்கும் மனநிலையில் இருந்தான். பின்புலம் நிழலான புகைப்படம்போல நிலவியின் பளிச்சிட்ட முகமும் கேக் துண்டு உதடுகள் பிரிந்தவுடனே பற்கள் தெரியும் சிரிப்பும் ஆக்கிரமித்தன. இத்தனை வருசக் காத்திருப்பும் தேடலும் முடிவுக்கு வரும் தருணம் இது. தலை கொடுத்தும் இதைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.
அவள் சொல்லும் எதையும் ஆணையாகக்கொண்டு செய்து முடிக்கத் தயாரானான். ‘குள்ளு’ பூனையா நாயா என்னும் குழப்பத்தோடு ‘அதனாலென்ன, வரட்டும், இருக்கட்டும்’ என்று உடனே ஒத்துக்கொண்டான். அப்படிச் சொன்னதும் அவள் முகம் விரிவதைப் பார்த்துப் பெயர்ப