மானுட இயல்புகளின் ஊற்றுக்கண்கள்
‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ நாவல் பழைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்த கோட்டயத்தில் 1937, 38, 39இல் நடந்த கதை. இந்த நாவலில் ஐந்து குடும்பங்கள் வருகின்றன.
இதைக் கதை என்று சொல்வதைவிடவும் கதைகள் என்று சொல்வதே பொருத்தமானது. பல பாத்திரங்கள், பல வாழ்க்கைகள், பல கதைகள் கொண்ட நாவல் இது. கோட்டயம் இந்த நாவலின் களம். நாவலின் காலம் 1937, 38, 39 ஆகிய ஆண்டுகள். இந்த நாவலில் வரும் ஐந்து குடும்பங்களின் பின்னணியும் அவற்றின் உறுப்பினர்களின் வாழ்க்கையும் குடும்பங்கள் மாற்றம் கொள்ளும் விதமும் விரிவாகச் சொல்லப்படுகின்றன.
கதை என்று எதுவும் இல்லை. ஒரு சில நிகழ்வுகள் மட்டும் தொடர்ச்சியாகச் சொல்லப்படுகின்றன. பல நிகழ்வுப் போக்குகள் நெருக்கமாகப் பின்தொடரப்படாமல் விடப்படுகின்றன. சில விஷயங்கள் நேரடியாகச் சொல்லப்படுகின்றன. பல விஷயங்கள் கோடி காட்டப்படுகின்றன. மேலும் பல விஷயங்கள் சற்றே பூடகத்தன்மையுடன் நிழல்களாகத் தோற்றம் கொள்கின்றன.
மேல்பரப்பில் இது எஸ்.ஆர்.எஸ். எனப்படும் எஸ்.ஆர். ஸ்ரீநிவாச அய்யர், அவரது மனைவி லட்சுமி, அவரது குழந்தைகள் ரமணி, பாலு, அவர் வீட்டில