இன்றைய நவீன மருத்துவத்தால் போலி மருத்துவர் என்று புறந்தள்ளப்பட்ட சித்தவைத்தியரின் மகள் ஒருத்தி நவீன அறிவியல்சார்ந்த மரபணுப் படிப்பில் ஆய்வு மேற்கொள்கிறார். அறிவியல் மாணவியான அப்பெண் தமிழ் வரலாறு தமிழ் அறிவு மற்றும் தான் தமிழ்ப்பெண் என்பன குறித்த ஓர்மை கொண்டவள். ஆராய்ச்சியின் மூலம் கி. பி. ஆறாம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்தில் இருந்து சீனா சென்ற போதிதருமன் என்னும் தமிழனின் உயிர்க்கூறை எடுத்துத் தற்காலத்தில் வாழும் அவன் வம்சாவளியைச் சேர்ந்தவனுக்குச் சிகிச்சை அளித்து மரபணுவைத் தூண்டிவிட்டுத் தமிழனின் பாரம்பரிய ஆற்றலை மலரச்செய்து அதன் மூலம் சீனாவிடமிருந்து இந்தியாவுக்கு வரும் ஆபத்தைத் தடுப்பதுதான் ஏழாம் அறிவு திரைப்படத்தின் கதை.
உலகத் திரைப்படங்கள் பலவற்றிலும் காட்டப்பட்ட மரபணு, வைரஸ் தொடர்பான கதையைக் கொண்ட இப்படம் தமிழின