மாடர்ன் டைம்ஸ்
1927இல் வெளிவந்த சார்லஸ் சாப்ளினின் புகழ்பெற்ற திரைப்படமான ‘மார்டன் டைம்’ஸின் 75ஆவது ஆண்டைச் சிறப்பிக்கும் வகையில் இக்கட்டுரை வெளியிடப்படுகிறது.
ஒவ்வொரு வருடமும் அதே கிறிஸ்துமஸ் தாத்தா கிறிஸ்துமஸ் நள்ளிரவில் சார்லஸ் சாப்ளினின் சுவிட்சர்லாந்து வீட்டிற்குத் தவறாமல் வந்து அவருடைய பேரக்குழந்தைகளுக்குப் பரிசுப் பொருட்களை விட்டுச் செல்வார். அவர் வரும்வரை விழித்திருந்து விட்டுப் பின்னரே சாப்ளின் தூங்கச் செல்வார். முப்பது வருடங்களுக்கும் மேலாக இவ்வழக்கம் நீடித்தது. ஆனால் சாப்ளின் அந்தக் கிறிஸ்துமஸ் தாத்தாவை ஒருதடவைகூட ஒப்பனைகளின்றிப் பார்த்ததில்லை. அதாவது அந்த ஆசாமியை வருடத்திற்கு ஒருமுறை கிறிஸ்துமஸ் தாத்தாவாக மட்டுமே பார்ப்பார். விரும்பியிருந்தால் சாப்ளின் அவரைக் கிறிஸ் துமஸ் முடிந்த பிறகு என்றாவது ஒருமுறை வழக்கமான உடையில் வருமாறு அழைப்புவிடுத்திருக்கலாம். ஆனால் அவர் தான் கொண்டிருந்த அந்தப் பிம்பத்தைக் கலைத்துவிடுவ தன் மூலம் ஒரு குழந்தையின் கனவிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள