கலங்கிய நதி
அத்தியாயம் ஆறு
1
ஹோட்டல் பிரம்மபுத்திராவின் புல்வெளி நதியின் விளிம்புவரை நீள்கிறது. மழை அப்போதுதான் நின்றிருக்க வேண்டும். புல்வெளியில் இடையிடையே சிறு குட்டைகள். மழை படைத்த குட்டைகள். பச்சையை வெல்ல முடியாதவை. மழை மறைந்த மகிழ்ச்சியில் மற்ற இடங்களில் புற்கள் தலைநிமிர முயன்றுகொண்டிருக்கின்றன. அவற்றின் நுனியிலிருந்து அடிவரை ஒட்டிக்கொண்டிருந்த நீர் முத்திரைகள் சூரியனின் ஒளியில் வைரப் பொட்டுகளாகப் பளீரிடுகின்றன. அற்பாயுள் வைரங்கள்.
நதியின் கோபத்தைச் சூரியன் தணித்திருக்க வேண்டும். பெருக்கம் இருந்தாலும், கரையை உடைத்து ஊருக்குள் வருவேன் எனப் பயமுறுத்தும் உக்கிரம் இல்லை. அப்போதுதான் விழித்துக்கொண்டதுபோல ஒரு தோற்றம். நீராவிப் படகுகள் பழுப்புப் பரப்பைக் கிழித்துக்கொண்டு செல்கின்றன. மீன் விற்பவ