சமூகத் தன்மானத்திற்கான போராட்டம்
மதுரையில் தொடர்ந்து காலச்சுவடு, கடவு மற்றும் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இணைந்து நடத்திவரும் அற்றைத் திங்கள் நிகழ்வில் தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார் சாதி, அரசியல் அதிகாரம், ஆதிக்க நடைமுறைகள் ஆகியவற்றுக்கு எதிரான செயல்பாடுகளை மேற்கொண்டுவரும் வழக்கறிஞர் பொ. ரத்தினம்.
அவரைப் பள்ளியில் சேர்த்தபோது பெற்றோர்களுக்குத் துல்லியமாகத் தேதி சொல்லத் தெரியாததால் பள்ளியிலேயே 10.01.1944 எனத் தோராயமாக எழுதிக்கொண்டார்கள். அதுவே இன்றுவரை அவர் பிறந்த தேதியாக இருக்கிறது. ஆரம்பக் காலங்களில் திராவிட இயக்கத்தினரின் வசீகரமான பேச்சுகளில் கவரப்பட்டுப் பிறகு இடதுசாரி இயக்கக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு நக்சல்பாரி இயக்க நண்பர்களோடு இணைந்தார். அதனால் தன் வாசிப்புத் தளம் விரிவடைந்ததையும் தன் இளமைப்பருவ அனுபவங்களாக விவரித்த ரத்தினம், சாக்ரடீஸ் சொன