பழிதீர்க்கப்படும் பண்பாட்டு மையம்
அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் இடம் மாற்றப்படப்போவதாக வெளிவந்த அதிர்ச்சிகரமான அறிவிப்புக்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்ற கேள்வியுடன் இருந்த நிலையில் அகமதாபாத்தில் மேப்பின் என்ற மிக முக்கியமான பதிப்பகத்தின் எடிட்ட ரான வினூதா மல்யாவிடமிருந்து எனக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது. மேற்படிச் செய்தி பற்றி மிகுந்த அக்கறையுடன் அவர் பேசியது வியப்பாகவே இருந்தது. அகில இந்திய அளவில் அறியப்பட்ட சில முக்கியமான ஆளுமைகளிடமிருந்து கையெழுத்துப் பெற்று அண்ணா நூலகத்திற்குப் பங்களித்திருக்கும் UNESCO, UNICEF போன்ற நிறுவனங்களுக்கு அனுப்புவது என முடிவு செய்தோம். பின்னர் திரு. ஹென்றி திபேனின் ஆலோசனைப்படி மனித உரிமை ஆணையத்திற்கும் அனுப்ப முடிவுசெய்தோம். தகவலுக்காக இந்த அறிக்கையை முகநூலில் வெளியிட்டபோது பல நண்பர்கள் தமது பெயரையும் அறிக்கையில் இணைத்துக்கொண்டனர். பரந்துபட்ட அளவில் கையெழுத்து வாங்குவது நோக்கமாக இருக்கவில்லை என்பதால் பலரையும் தொடர்புகொள்ளவில்லை. நண்பர்கள் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
- கண்ணன்
அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை மருத்துவ மனையாக