‘தராதலத்து பாஷைகளில் தமிழ்ப்பாட்டை மொழிபெயர்த்தால் தெரியும் சேதி’
முத்தொள்ளாயிரம் நூலின் - ஆங்கில மொழிபெயர்ப்பு Red Lilies and Frightened Birds ஆகஸ்ட் 2011இல் வெளிவந்துவிட்டது. ம. இலெ. தங்கப்பாவின் மொழிபெயர்ப்பில், ஆ. இரா. வேங்கடாசலபதியின் அறிமுகத்துடன் பெங்குவின் இந்நூலை வெளியிட்டுள்ளது. இந்நூலின் அறிமுகக் கூட்டம் புதுவையில் 9 அக்டோபர் 2011 அன்று நடைபெற்றது.
20ஆம் நூற்றாண்டில் டி.கே. சிதம்பரநாத முதலியாரால் முன்னெடுக்கப்பட்டுப் பரவலாக்கப்பட்ட இப்பழந்தமிழ் நூலின் காலம் ஒன்பதாம் நூற்றாண்டு என்பது வையாபுரிப் பிள்ளையின் கருத்து. சதாசிவ பண்டாரத்தார் ஆறாம் நூற்றாண்டு என்பார். 900 பாடல்களின் தொகுப்பாகக் கருதப்படும் முத்தொள்ளாயிரத்தில் இப்போது கிடைப்பவை 130 மட்டுமே. இவை அனைத்தின் மொழிபெயர்ப்பைக் கொண்ட நூல் இது. பாண்டிய, சோழ, சேர அரசர்களின் புகழ்பாடும் இப்பாடல்கள் வெண்பாவில் அமைந்தவை. மேலோட்டமாகப் பார்த்தால்