சபிக்கப்பட்டவர்கள்
என் வாழ்க்கையில் அந்த அதிசயமான, அபூர்வமான நிகழ்ச்சி நடந்தது!
மூன்று வருடங்களுக்கு முன்பு ஒரு வேலையாக நான் பாரிஷால் பகுதிக்குப் போக வேண்டியிருந்தது.
இந்தப் பகுதியின் படித்துறையிலிருந்து, பன்னிரண்டு மணியளவில் படகில் புறப்பட்டேன். பாரிஷால் பகுதியில் வசித்த ஒருவரும் என்னுடன் படகில் வந்தார். ஏதோ பேசிக்கொண்டே வந்ததில் நேரம் கழிந்தது!
அப்போது துர்க்கா பூஜை முடிந்திருந்தது. வானத்தில் மேகங்கள் கூட்டம் கூட்டமாகத் தவழ்ந்துகொண்டிருந்தன. இடையிடையே மழைத் தூறலும் விழுந்துகொண்டிருந்தது. சந்தியாக் காலத்திற்குச் சற்று முன்பு, வானம் சற்றே வெளிறிப் போயிருந்தது. உடைந்த மேகங்களுக்கிடையே சதுர்த்தசியின் நிலவு லேசாக மின்னிக்கொண்டிருந்தது.
சந்தியாக் காலம் நெருங்கியதுமே நாங்கள் நதியின் முக்கியமான அகலமான பகுதியை விட்டுவிட்டு