விலை கொடுக்கும் மக்கள்
நிதிச்சுமையைக் காரணம் காட்டிப் பேருந்துக் கட்டணம், பால் விற்பனை விலை ஆகியவற்றைக் கடுமையாக உயர்த்தியிருக்கிறது தமிழக அரசு. மின் கட்டணம் உயர்த்தப்படும் என்னும் அதிகாரபூர்வமான அறிவிப்பும் வந்துள்ளது. இலவசங்களில் திளைத்துக்கொண்டிருக்கும் மக்களுக்கு இது பேரதிர்ச்சியூட்டியுள்ளது. பயணங்களுக்குப் பொது வாகனங்களை நம்பியிருக்கும் ஏழை, நடுத்தர மக்களைப் பேருந்துக் கட்டண உயர்வு கடுமையாகப் பாதிக்கும் நடவடிக்கை. அன்றாட வாழ்வின் தவிர்க்க முடியாத தேவையாக உள்ள பாலின் விலை உயர்வால் அதிகம் பாதிக்கப்படப்போவது ஏழை, நடுத்தர வர்க்கத்தினர்தாம். அடித்தள மக்களின், குறிப்பாக குழந்தைகளின் ஊட்டச்சத்தில் ஏற்படக்கூடிய பாதிப்பு பற்றிய கரிசனம் அரசுக்கு ஏற்பட வேண்டும். கடந்த பத்தாண்டுகளில் பேருந்து, மின் கட்டணம் அதிக மாற்றமில்லாமல் தொடர்ந்து வந்திருப்பதன் பின்னணியில் தமிழக அரசின் தற்போதைய நடவடிக்கை கடும் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது.
கடந்த தேர்தலில் திமுக பெற்ற அவமானகரமான தோல்விக்கு மின்வெட்டு ஒரு முக்கியமான காரணம். 2005-2006இல் 9,300 கோடி ரூபாயாக இருந்த தமிழக மின்வாரியத்தின் கடன் சுமை 2