நூலும் வாளும்
கட்டுரை
நூலும் வாளும்
பொதுவெளிகளில் சிலைகள்
ஸ்டாலின் ராஜாங்கம்
கடந்த சில மாதங்களுக்குள் சென்னை, ஈரோடு ஆகிய இரண்டு இடங்களில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அக்கட்சி சார்பாகச் சிலைகள் திறக்கப்பட்டன. அவ்விழாவில் ராகுல்காந்தியைப் பிரதமர் வேட்பாளராகக் குறிப்பிட்டு மு.க. ஸ்டாலின் பேசியிருந்தார். கூட்டணிக் கட்சிகள் முடிவெடுக்கும் முன்பே இவ்வாறு அறிவிப்பது தொடர்பான விவாதம் அப்போது எழுந்தடங்கியது. ஆனால் அதைவிட விவாதித்திருக்க வேண்டிய மற்றொரு விசயம் விவாதிக்கப்படவில்லை. கருணாநிதி மறைந்த பின்னால் அமைக்கப்படும் சிலைகள் என்பதால் இனிமேல் அமையப்போகும்