டாக்டர் வரதராஜுலு நாயுடு குருகுலப் போராட்ட வீரர்
டாக்டர் பெருமாள் வரதராஜுலு நாயுடு (1887-1957) நவீன தமிழகத்தின் சமூக, அரசியல், பத்திரிகை உலகில் அரை நூற்றாண்டுக் காலம் பல முன்னோடிச் செயல்களை ஆற்றிய பேராளுமை.
சமூக சமத்துவம் நோக்கி சேரன்மாதேவி குருகுலம் தொடங்கிக் குலக்கல்வித் திட்டம்வரை; நாட்டுவிடுதலைக்காக ஹோம்ரூல் தொடங்கி சென்னை மாகாண சங்கம், சைமன் குழு விலக்கு, நீல் சிலை அகற்றம் உப்புச் சத்தியாகிரகம்வரை இந்நூற்றாண்டின் முதல் அரைப் பகுதியின் அனைத்துப் போராட்டங்களிலும் முதல் கொடி உயர்த்திய முன்னணிப் போராளி. தென்னாட்டுத் திலகர் என வ. உ. சியும், தமிழ்ப் பெரியார் என வ. ரா. வும் இவரைக் கொண்டாடினர். அரசியலையும் மொழியையும் ஜனநாயகப்படுத்திய செயலாளுமை. பிரபஞ்சமித்திரன், தமிழ்நாடு பத்திரிகைகளின் ஆசிரியர். இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழைத் தொடங்கியவர்.
பெரியாரின் நண