மெரினா - கடல் நீரும் கடற்கரை மணலும்
தேசிய விருது பெற்ற பசங்க திரைப் படத்தை இயக்கியவர் பாண்டிராஜ் என்பதாலும் சின்னத் திரையில் தனது எள்ளல் மிக்க பாணியின் காரணமாகப் பெரும்பாலானோரின் கவனத்தை ஈர்த்திருந்த சிவகார்த்திகேயன் கதாநாயகனாக அறிமுகப்படுத்தப்பட்டிருந்ததாலும் வெளியாவதற்கு முன்பே பிரத்யேகக் கவனம்பெற்றிருந்தது மெரினா. ஒரு திரைப்படம் வெளியாகும் முன்பும் வெளியான பின்பும் அதைப் பற்றிக் கட்டமைக்கப்படும் உரையாடல்கள் சின்னத் திரையில் பரவலாக இடம்பெறுவது வாடிக்கையாகிவிட்டது. இது ஒருவகையான வியாபார உத்தி. பெரிய திரை, சின்னத் திரை இரண்டும் இதனால் பயனடையுமென நம்பப்படுகிறது. அத்தகைய நிகழ்ச்சிகளில் திரைப் படத்தைப் பற்றி வெளிப்படுத்தப்படும் கருத்துகள் அதைச் சந்தைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கும்.
மெரினா பற்றிய முன்னோட்டங்களும் அத்தகையானவையாகவே இருந்தன. இந்த உத்தி வ