பண்பாடும் பணித்துறைஞர்களும்*
‘நிலா, நிலா, ஓடிவா
நில்லாமல் ஓடிவா
மலைமேல் ஏறிவா
மல்லிகைப் பூ கொண்டுவா’
இந்தப் பாட்டைப் பாடி எத்தனையோ தமிழ்ப் பெற்றோர்கள் குழந்தைகளுக்குத் தங்கள் கைகளால் உணவு ஊட்டியிருக்கிறார்கள். பரம்பரையாக இந்தியர் செய்துவந்த இந்தக் காரியம் இப்போது நோர்வேயில் பிரச்சினையை ஏற்படுத்தியிருக்கிறது. அழ. வள்ளியப்பாவின் இந்தப் பாட்டுக்கு ஒத்த வங்காளக் கவிதை இருக்கிறதா தெரியாது. ஆனால் தன்னுடைய சொந்தக் குழந்தைக்குக் கைகளால் உணவளித்ததால் நோர்வேயில் வசிக்கும் மேற்கு வங்காளத் தாய் ஒருவரிடமிருந்து அவருடைய குழந்தையைப் பிரித்து வளர்ப்புப் பெற்றோரிடம் ஒப்படைத்ததை ஊடகச் செய்திகள் மூலமாக அறிந்திருப்பீர்கள். அந்த நாட்டுக் குழந்தை வளர்ப்பு விதிகளை அனுரூப்-சாகாரியா பட்டாச்சாரியா தம்பதிகள் மீறிவிட்டதாக அவர்களுடைய குழந்தைக