வலசை
தேய் வழக்கிலிருந்து விடுபட்டுத் தமிழ்ப் புனைவு வெளி ஓர் ஆரோக்கியமான இடத்திற்கு நகர்ந்துகொண்டிருக்கிறது. புனைவுக்கான சரடை நாம் விதந்தோம்பிய முந்தைய தலைமுறைப் பார்வைகளால்தாம் முன்வைக்கிறோம். அதைத் தவிர்த்து ஒரு புனைவை எழுத்தாக்குவதில் உள்ள புதிய தொழில்நுட்பம்தான் இன்றைக்கு அவசியமாக இருக்கிறது. பதினைந்து நாடுகளின் குறிப்பிடத்தக்க ஆக்கங்களோடு வெளிவந்திருக்கும் வலசை, கதையைச் சொல்வதில் உள்ள புதிய அம்சங்களை தமிழ்ச் சூழலுக்கு அளிக்கிறது. ஏற்கனவே தமிழ்ச் சூழலுக்கு அறிமுகமாகியுள்ள ஜோஸா சரமாகுவின் பார்வையின்மை நாவல் பகுதியை வி. பாலகுமார் மொழிபெயர்த்துள்ளார். ஜ்யோவ்ராம் சுந்தர் மொழிபெயர்த்துள்ள புக்கோவெஸ்கியின் கவிதை சுவாரசியமளிக்கிறது. கவிதா முரளிதரன் மொழிபெயர்த்துள்ள அரேபியப் பெண் கவிதைகளும் சபரிநாதன் மொழிபெயர்த்துள்ள இல்யா கமின்ஸ்கியின்